அஸ்வினுக்காக தமிழில் ட்வீட் போட்ட சச்சின் டெண்டுல்கர்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?!.. வைரல் பதிவு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners
மேலும் நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடிய போதும், அவர்கள் விக்கெட்டுகள் விழ ஆஸ்திரேலிய அணி ரன் அடிக்க தடுமாறியது. அதிலும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
64 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 5 மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக ஆடிய ரவீந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் நாளில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 59 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அசாத்திய சாதனை ஒன்றை படைத்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்பு அணில் கும்ப்ளே இந்த சாதனையுடன் விளங்கி இருந்தார். அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் எடுத்திருந்த சூழலில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 89 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது தவிர இன்னும் சில சாதனைகளையும் அஸ்வின் படைத்துள்ள சூழலில், அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் தவிர்க்க முடியாத சாதனைகளையும் உருவாக்க வேண்டும் என கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Image Credit : Sachin Tendulkar Twitter
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினின் சாதனையை பாராட்டி தமிழில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். "அற்புதமான மைல்கல்! Congrats on 450!" என சச்சின் தனது ட்வீட்டில் குறிப்பிட்டு அஸ்வினை டேக் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்