‘கடைசி ஓவரை அவர் கிட்டயா குடுக்குறது’.. ‘ஜாம்பவானே கலாச்சிட்டார்’!.. 2 ஓவரில் நடந்த ‘ட்விஸ்ட்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி குறித்து சச்சின் ட்விட் செய்துள்ளார்.

‘கடைசி ஓவரை அவர் கிட்டயா குடுக்குறது’.. ‘ஜாம்பவானே கலாச்சிட்டார்’!.. 2 ஓவரில் நடந்த ‘ட்விஸ்ட்’!

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் இன்று (01.10.2020) மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, டி காக் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை சிறப்பாக வீசிய காட்ரெல், குயிண்டன் டிக்காக்கை டக் அவுட் செய்தார்.

Sachin Tendulkar tweet about KXIP 20th over against MI

இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் அவுட்டாக, மறுபுறம் பொருப்புடன் ரோஹித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய ரோகித் சர்மா 70 ரன்களுக்கு அவுட் ஆனார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் இப்போட்டியில் 28 ரன்களுக்கு வெளியேறினார்.

Sachin Tendulkar tweet about KXIP 20th over against MI

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடினர். 18 ஓவர்களின் முடிவில் 147 என்று இருந்த மும்பை அணியின் ஸ்கோரை இரண்டே ஓவர்களில் 191 ரன்களுக்கு கொண்டு சென்றனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதில் 20 ஓவரை பஞ்சாப் அணியின் ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் வீசினார். அந்த ஓவரில் 25 ரன்களை (4 சிக்ஸர்கள் உட்பட) மும்பை அணி எடுத்தது. கடைசி ஓவரை ஆஃப் ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கௌதம்-க்கு கொடுத்ததை கிரிக்கெட் ஜாம்பவானும், மும்பை அணியின் முன்னால் வீரருமான சச்சின் விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார். இவர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய முருகன் அஸ்வினுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுலின் இந்த முடிவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்