எல்லா கோவா plan-ம் கேன்சல் ஆவதில்லை… சச்சினின் குறும்பான கமெண்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள புகைப்படமும் அதற்கு அவர் இட்ட கமெண்ட்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
God of cricket
கிரிக்கெட்டின் கடவுள் என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 16 வயது முதல் கிரிக்கெட் ஆடிய சச்சின் இதுவரையில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்நேரம் வரையில் அந்த சாதனைகளை முறியடிக்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தடுமாறிவருகின்றனர். ஓய்வு பெற்று ஆண்டு கணக்கானாலும் சச்சினின் ரசிகர்கள் இன்றும் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, சர்வதேசப் போட்டிகளில் 30000 ரன்களுக்கு மேல் கடந்தது, 100 சர்வதேச சதங்கள் என அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளார். அவரின் பல சாதனைகளை பின் வரும் முறியடிக்கப்படாமலே போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகரக்ளை சோகத்தில் ஆழ்த்தி கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஓய்வுக்குப் பிறகு
ஓய்வுக்கு பிறகு அவர் கிரிக்கெட்டை பரப்பும் விதமாக பல நட்புமுறையிலான கிரிக்கெட் தொடர்களில் ஓய்வு பெற்ற வீரர்களோடு கலந்துகொண்டு விளையாடி வருகிறார். சாலை விபத்து விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் டி 20 தொடரில் அவர் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருகிறார். அதுபோல ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆலோசகர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
சமூகவலைதளங்களில் தீவிரம்
ஓய்வுக்குப் பிறகு ரசிகர்களோடு தொடர்பில் இருப்பதற்காக சமூகவலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார். தன் வீட்டில் சமையல் செய்வது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார். இப்போது அவர் அப்படி பகிர்ந்துள்ள புகைப்படமும் அதில் அவர் இட்டுள்ள கமெண்ட்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள சச்சின் அங்கிருந்தபடி புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்களோடு ‘எல்லா கோவா போகும் திட்டங்களும் கேன்சல் ஆவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவா plan
கோவா ப்ளான் என்பது ஆண்கள் இடையே அதிகமாக விவாதிக்கப்படும் திட்டங்களில் ஒன்று. இது சம்மந்தமாக நண்பர்கள் தங்கள் குழுக்களுக்குள் விவாதித்து ஒரு தேதியை முடிவு செய்வார்கள். ஆனால் தேதி நெருங்க நெருங்க குழுவில் இருக்கும் ஒவ்வொருவராக ஒவ்வொரு காரணங்களை சொல்லி சுற்றுலா திட்டத்தில் இருந்து கழண்டு கொள்வார்கள். அதனால் கடைசியில் கோவா செல்லும் திட்டமே கேன்சல் ஆகிவிடும். இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் பல மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்