“சஞ்சு சாம்சன் அப்படி சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு”.. IPL final-ல் RR அணி செய்த தவறு.. சுட்டிக்காட்டிய சச்சின்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி செய்த தவறை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Also Read | கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!
ஐபிஎல் 15-வது சீசன் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல், பந்துவீச்சில் நிலையான திட்டம் இல்லை என பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ராஜஸ்தான் அணியின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், ‘ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஆச்சரியமாக இருந்தது. கடந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்த போது, பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைத்தது. ஆனால் பெரிய போட்டி என்ற காரணத்தால் பேட்டிங்கை தேர்வு செய்து சொதப்பிவிட்டனர்.
அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணி விளையாடியதில்லை. ஆனால் ராஜஸ்தான் அணி 2-வது குவாலிஃபையரில் விளையாடி இருந்தது. இந்த மைதானத்தை பற்றி தெரிந்திருந்தும் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறு. ஒருவேளை ஜாஸ் பட்லர் கடந்த போட்டியில் அதிரடி காட்டியதை போல், இறுதிப்போட்டியிலும் அதை வெளிப்படுத்துவார் என பேட்டிங் எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன.
ஆனால் ஜாஸ் பட்லருக்கு சஞ்சு சாம்சனை தவிர்த்து வேறு யாரிடமும் இருந்து பெரியளவில் பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. 50 சதவீத அளவிற்கு ஜாஸ் பட்லர் அடித்திருந்தால், மீதமுள்ள 50 சதவீத ரன்களை மற்ற வீரர்கள் தான் அடித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வீரர் கூட கைக்கொடுக்கவில்லை. தனி நபராக போராடி அவர் அவுட்டானார்’ என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
Also Read | IPL தொடரில் கடும் விமர்சனத்தை சந்தித்த ரியான் பராக்.. அடுத்த சீசனில் மாறும் ரோல்?.. RR கோச் முக்கிய தகவல்..!
மற்ற செய்திகள்