IPL 2022: பெரிய தலைங்களுக்கு இடம் இல்லை... தொடரின் சிறந்த அணி… சச்சின் XI-ல் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2022 தொடரின் சிறந்த அணியை சச்சின் டெண்டுல்கர் தன் பார்வையில் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2022
ஐபிஎல் 15-வது சீசனின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருந்தார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 487 ரன்களும், 8 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்ட்யா எடுத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் அறிமுகமாகி முதல் தொடரிலேயே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரின் சிறந்த அணி…
இந்நிலையில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறந்த அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். அதில் பல மூத்த வீரர்களுக்கு இடம் இல்லை. மேலும் அணிதேர்வு குறித்து பேசிய அவர் “வீரர்களின் முந்தைய சாதனைகளைக் கணக்கில் கொள்ளாமல் முழுக்க முழ்க்க இந்த சீசனின் ஆட்டத்திறனைக் கொண்டே அணியை தேர்வு செய்துள்ளதாகவும்” கூறியுள்ளார்.
சச்சினின் அணியில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு கோப்பையை குஜராத் அணிக்கு வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் செயல்பாடு குறித்து “ இந்த சீசனின் திறமையான கேப்டன் ஹர்திக்தான். தெளிவாகவும், மிகவும் ஆக்டிவ்வாகவும் அவர் இயங்கினார்” எனக் கூறியுள்ளார்.
சச்சினின் அணி
ஷிகார் தவான், ஜோஸ் பட்லர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், முகமது ஷமி, பூம்ரா, சஹால்
சச்சினின் அணியில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து 4 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து 2 வீரர்களும், பஞ்சாப்பில் இருந்து இரண்டு வீரர்களும், பெங்களூர் அணியில் இருந்து ஒரு வீரரும், லக்னோ அணியில் இருந்து ஒரு வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஒரு வீரரும் இடம்பெற்றுள்ளனர்.
Also Read | “புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!
மற்ற செய்திகள்