‘அவரோட காலத்துல அவர்தான் பெஸ்ட் ஸ்பின்னர்’.. மாரடைப்பால் உயிரந்த முன்னாள் வீரர்..! ட்விட்டரில் சச்சின் இரங்கல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமாரடைப்பால் உயிரிழந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதருக்கு சச்சின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளாரான அப்துல் காதர் (63), அந்த அணியின் சார்பாக 67 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மொத்தமாக 368 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 1970 மற்றும் 1980 காலகட்டங்களில் வேகப்பந்து வீச்சாளரகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த சமயத்தில், சுழற்பந்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததில் இவரின் பங்கு முக்கித்துவம் வாய்ந்ததாக இருந்தது.
மேலும் கடந்த 2009 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்துல் காதர் மாரடைப்பால் திடீரென காலமானார். இவரது இறப்புக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘அப்துல் காதருக்கு எதிராக விளையாடியதை நினைவு கூர்கிறேன். அவருடைய காலகட்டத்தில் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அவரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என சச்சின் பதிவிட்டுள்ளார்.
Remember playing against Abdul Qadir, one of the best spinners of his times. My heartfelt condolences to his family. RIP. pic.twitter.com/iu03d45sJ0
— Sachin Tendulkar (@sachin_rt) September 7, 2019