சச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்!’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் சென்னையில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்களிடம் உதவி ஒன்றையும் கேட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள சச்சின், “சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்கு நான் ஆர்டர் செய்திருந்த காபியைக் கொண்டுவந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் என்னிடம் கிரிக்கெட் தொடர்பாக பேச வேண்டும் எனக் கேட்டார். நானும் சொல்லுங்கள் என்று சொன்னேன்.
அப்போது அவர், “நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கும். நீங்கள் எப்போதும் பேட்டிங் செய்யும்போது உங்கள் கையில் உள்ள எல்போ கார்டு உங்களுக்கு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.
இந்த உலகத்தில் யாரும் எனக்கு அதை சொல்லவில்லை. அவர்தான் அதை கவனித்து சொன்னார். அதன்பிறகுதான் நான் எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என வீடியோவாகவும், தமிழில் ட்வீட் செய்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019