சூரிய குமார் யாதவின் Fan Girl சம்பவம்.. சிறுமியின் 360 டிகிரி பேட்டிங்.. ஜாம்பவான் சச்சின் பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரிய குமார் யாதவ் போலவே சிறுமி ஒருவர் பேட்டிங் செய்யும் வீடியோவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சூரிய குமார் யாதவின் Fan Girl சம்பவம்.. சிறுமியின் 360 டிகிரி பேட்டிங்.. ஜாம்பவான் சச்சின் பகிர்ந்த வீடியோ..!

                         Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியில் டி20 போட்டிகளின் ஸ்பெஷலிஸ்ட்டாக கருதப்படுபவர் சூரிய குமார் யாதவ். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை T20 தொடரில் 239 ரன்கள் விளாசி இருந்தார் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ். தொடர்ந்து நியூசிலாந்து அணியுடனான தொடரிலும் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டின் மிகச்சிறந்த T20 வீரராக சர்வதேச கிரிக்கெட் வாரியம் சூரிய குமார் யாதவை தேர்ந்தெடுத்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், அச்சு அசல் சூரிய குமார் யாதவ் போலவே பேட்டிங் செய்யும் சிறுமி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 14 வயதான முமல் மெஹர் என்னும் இந்த சிறுமி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். அப்போது பந்துகளை 360 டிகிரியில் விளாசுகிறார். இந்த சிறுமி ராஜஸ்தானின் பார்மர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. இந்த வீடியோவை கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் தன்னுடைய பதிவில்,"நேற்று தான் ஏலம் முடிவடைந்தது. இன்றே போட்டிகள் துவங்கிவிட்டதா? உன்னுடைய பேட்டிங்கை கண்டு ரசித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றதை குறிப்பிட்டு சச்சின் எழுதி இருந்த இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் இந்த சிறுமி இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புகளை வழங்கும்படி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் அவர் கோரிக்கையும் வைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

SURIYA KUMAR YADAV, SACHIN TENDULKAR

மற்ற செய்திகள்