VIDEO: "இப்டி ஒரு 'ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பா'?!"... "நெகிழ்ந்த ரசிகர்கள்!"... "புகழ்ந்து தள்ளிய சச்சின்!"...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

போட்டியின் நடுவே காயப்பட்ட மேற்கு இந்தியத் தீவு வீரரை, கைத்தாங்கலாக சுமந்து சென்ற நியூசிலாந்து அணி வீரர்களின் செயலை சச்சின் பாராட்டியுள்ளார்.

VIDEO: "இப்டி ஒரு 'ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பா'?!"... "நெகிழ்ந்த ரசிகர்கள்!"... "புகழ்ந்து தள்ளிய சச்சின்!"...

19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான உலகக் கோப்பை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுக்குமான போட்டி நேற்று நடைபெற்றது.

அப்போது, மேற்கிந்தியத் தீவு பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், அந்த அணி பேட்ஸ்மேனுக்கு காலில் அடி பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் அவுட் ஆனதும், நடந்து செல்ல அவர் சிரமப்பட்டுள்ளார். இதை கவனித்த நியூசிலாந்து அணி வீரர்கள், காயப்பட்ட வீரரைக் கைத்தாங்கலாக சுமந்து சென்று பெவிலியன் திரும்ப உதவி செய்தனர்.

இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டெல்கர், நியூசிலாந்து அணி வீரர்களின் செயலை உச்சிமுகர்ந்துள்ளார்.

 

 

CRICKET, SACHIN, WI, NZ