"எனக்கும் அவர் பௌலிங்ல விளையாடணும்... எல்லோரும் அவர பத்திதான் பேசறாங்க!!!"... 'சச்சின் எதிர்கொள்ள விரும்பும் இளம்வீரர்???'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇப்போதுள்ள பந்துவீச்சாளர்களில் தனக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளர் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தற்காலத்தில் உள்ள வீரர்களை எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்பது குறித்து அதிகளவில் தற்போது விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதாவது, விராட் கோலிக்கு கிளென் மெக்ரத் பந்துவீசினால் எப்படி இருக்கும், ஆடம் கில்கிறிஸ்ட்டிற்கு பும்ரா யார்க்கர் வீசினால் எப்படி இருக்கும் போன்ற விவாதங்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் ஜாம்வான் சச்சின் டெண்டுல்கரும் இதுபோன்ற விவாதத்தில் பங்கேற்று சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
அந்த விவாதத்தில் அவரிடம், தற்காலத்தில் நீங்கள் யாரை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்? பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் போன்றவர்களில் யார் என்று சொல்லுங்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சச்சின், இப்போதுள்ள பௌலர்களில் ரஷித் கானை எதிர்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷித் கான் பற்றி பேசியுள்ள சச்சின், "எல்லோரும் அவருடைய பந்துவீச்சு குறித்து தான் பேசுகின்றனர். அதனால் எனக்கும் அவருடைய பந்தை எதிர்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. அவரை எதிர்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். ரஷித் கான் தன்னுடைய பந்துவீச்சில் சில மாறுதல்களை அடிக்கடி செய்யக் கூடியவர். கூக்ளி, லெக் ஸ்பின், டாப் ஸ்பின் என அனைத்தையும் கலந்து வீசி வருகிறார். அவரை எதிர்கொள்வது நிச்சயம் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்