‘அப்போ இருந்தது வேற டீம்’... ‘அந்த 3 பேரு இப்ப இருக்காங்க’... ‘இந்திய அணியை எச்சரிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘அப்போ இருந்தது வேற டீம்’... ‘அந்த 3 பேரு இப்ப இருக்காங்க’... ‘இந்திய அணியை எச்சரிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்’...!!!

வரும் 17-ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதுகுறித்து பல முன்னாள் வீரர்களும் இரு அணிகளுக்கும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் அந்த வகையில் டெஸ்ட் போட்டி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த முறை ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்திய போது இருந்த அணியுடன் ஒப்பிட்டால், தற்போது மூன்று முக்கிய வீரர்கள் அணியில் இருப்பதை சுட்டிக் காட்டி உள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறியதாவது, ‘கடந்த முறை இந்திய அணிக்கு எதிராக ஆடிய ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் மூன்று முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதாவது, மூத்த வீரர்களான வார்னர், ஸ்மித் மற்றும் லாபுஷாக்னே இடம் பெற்றுள்ளனர்.

Sachin names biggest threat for India ahead of Australia Test series

இது முந்தைய அணியை விட மிகவும் சிறந்த அணி. இரண்டு மூத்த வீரர்கள் அணியில் இல்லை என்றால் வெற்றிடம் உணரப்படும். அதைத் தான் ஆஸ்திரேலிய அணி அப்போது உணர்ந்தது. ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலும் வலுவானது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடலாம். ஸ்விங் செய்வது, விதவிதமாக பந்து வீசுவது, எதிர்பாராத முறையில் பந்து வீசுவது, ரிஸ்ட் ஸ்பின், பிங்கர் ஸ்பின் என அனைத்து வகையான பந்துவீச்சும் இந்திய அணியில் தற்போது இடம் பிடித்துள்ளது. இரு அணிகளையும் ஒப்பிட நான் விரும்பவில்லை’ என்று சச்சின் தெரிவித்துள்ளார். கடந்த 2018-2019 சீசனில் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி, 2-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்