ஆஹா, இந்தியா டீம்'ல இப்டி ஒரு சிக்கல் வேற இருக்கா?.. என்ன செய்யப் போகிறார் கோலி??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியிலுள்ள சிக்கல் என்ன என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, நாளை மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது.
இதற்கு முன்பாக, இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால், நாளை ஆரம்பமாகும் போட்டி தான், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்க போகிறது.
ஆடும் லெவன் என்ன?
கடந்த டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கவில்லை. இதனால், இந்திய அணியை கே எல் ராகுல் வழி நடத்தியிருந்தார். இந்நிலையில், நாளைய போட்டியில், கோலி களமிறங்குவதை அவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதி செய்திருந்தார். கோலி களமிறங்குவதால், அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் விலக வேண்டி இருக்கும் என்பது பற்றி, பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இவங்க வேண்டாம்
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாகவே, பல டெஸ்ட் தொடர்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், அவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும், அவர்களுக்கு பதிலாக, இளம் வீரர்களை அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதிகரித்த விமர்சனம்
தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய புஜாரா மாற்றும் ரஹானே ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்காமல் மீண்டும் சொதப்பினர். தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், புஜாரா 3 ரன்களிலும், ரஹானே முதல் பந்திலும் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினர். இதனால், அவர்கள் மீதான விமர்சனம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது.
எழுந்த கேள்விகள்
நிச்சயம் அடுத்த போட்டியில், இருவரையும் வெளியே உட்கார வைக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வரை கருத்து தெரிவித்தனர். ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இருவரும் அரைச் சதமடித்து, தங்களது திறனை ஓரளவுக்கு நிரூபித்தனர். இதன் காரணமாக, கோலி மீண்டும் வரவிருப்பதால், யார் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்பது குறித்து, அதிகம் கேள்விகள் எழுந்துள்ளது.
கோலி தான் முடிவு பண்ணனும்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான சபா கரீம், இந்திய அணியின் ஆடும் லெவன் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'கேப்டன் விராட் கோலி, ராகுல் டிராவிட்டுடன் ஆடும் லெவன் யார் இடம்பெற வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். விராட் கோலி மீண்டும் அணியில் இடம்பிடிப்பதால், ரஹானே அல்லது ஹனுமா விஹாரி ஆகியோரில் யார் ஆடுவார்கள் என்பது தான் பெரிய கேள்வி. அதே போல, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
யார் இடம்பெறுவார்கள்?
அவருக்கு பதிலாக யார் களமிறங்கப் போகிறார்கள் என்பதும் ஒரு கேள்வி தான். அனுபவத்தின் பெயரில் பந்து வீச்சாளரை களமிறக்க வேண்டும் என்றால், நிச்சயம் நீங்கள் இஷாந்த் ஷர்மாவை தான் ஆடச் செய்ய வேண்டும். ஆனால், பயிற்சியின் போது, உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த் ஷர்மா ஆகிய இருவரில், யார் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை வைத்தே அதனை முடிவு செய்ய முடியும்' என சபா கரீம் தெரிவித்துள்ளார்.
என்ன செய்யப் போகிறார் கோலி?
நாளை ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டி, இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டியதில் முக்கிய பங்காக விளங்குவதால், அணியின் வீரர்கள் தேர்வு நிச்சயம் முக்கியமான ஒன்றாகும். புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரும் ஓரளவுக்கு ஃபார்மில் இருக்கின்றனர். இதனால், எப்படி ஆடும் லெவனை கோலி தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்