‘பர்ஸ்ட் டைம் அவர பார்த்தப்போ’...!!! ‘தானாவே வந்து தோனி செய்த நெகிழச்சி காரியம்’...!!! 'அது என்னோட அதிர்ஷ்டம் தான்’...!! ருதுராஜ் பதிவிட்ட சுவாராஸ்ய தகவல்...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த சிஎஸ்கே இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தன்னுடைய அணியின் கேப்டன் தோனி குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

‘பர்ஸ்ட் டைம் அவர பார்த்தப்போ’...!!! ‘தானாவே வந்து தோனி செய்த நெகிழச்சி காரியம்’...!!! 'அது என்னோட அதிர்ஷ்டம் தான்’...!! ருதுராஜ் பதிவிட்ட சுவாராஸ்ய தகவல்...!!!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முதலாக பிளே ஆஃப் செல்லாமல், நாடு திரும்பியுள்ளது சிஎஸ்கே அணி. ஆயினும் 12 புள்ளிகள் பெற்று கௌரவமாக இந்த சீசனை விட்டு சிஎஸ்கே அணி  வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இதற்கு அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஒரு முக்கிய காரணம்.

பல்வேறு குழப்பங்களுக்கு இடையே சிஎஸ்கே அணி விளையாடி, தொடர் தோல்விகளை சந்தித்தது. அதிலிருந்து மீண்டு சில வாரங்கள் கழித்து அணிக்கு திரும்பிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி மன்னனாக சிஎஸ்கேவில் வலம் வந்தார். தொடர்ந்து அரைசதங்களை விளாசி சாதனையும் படைத்தார். அவர் தன்னுடைய திறமையை காண்பிக்கும் முன்னதாகவே பிளே ஆஃப் போகாமலே வெளியேறியது சிஎஸ்கே அணி.

Ruturaj Gaikwad Posts Heartwarming Message For MS Dhoni

இந்நிலையில் தான் கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடியதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து விளையாடியது கனவு நனவான தருணம் என்றும் கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 2016-ல் அவரை முதல் முறையாக சந்தித்த போது, தோனி செய்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அப்போது தான் ஜார்க்கண்ட் அணியில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், எனது விரலில் காயம் ஏற்பட்டது.

அந்த அணியின் வழிகாட்டியாக விளங்கிய தோனி, தன்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.  தற்போது இந்த அக்டோபர் 2020 ஐபிஎல் சீசனில் முதல் 3 போட்டிகளில் 2 டக் அவுட்கள் உள்பட 5 ரன்களே எடுத்து சொற்ப ரன்களை அடித்தபோது, தன்னிடம் நேராக வந்து, வாழ்க்கை குறித்து பேசியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அவருடன் டிரஸ்ஸிங் ரூமில் நேரம் செலவழிப்பதும், அவருடன் இணைந்து விளையாடுவதே தனது அதிர்ஷ்டம் தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்