'நான் எதிர்பார்த்தது ஒண்ணு, ஆனா நடந்தது'?... 'அந்த பையன் வேற லெவல் சம்பவம் பண்ணிட்டான்'... போட்டிக்கு பின்பு மனம்திறந்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

12 புள்ளிகள் பெற்று சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

'நான் எதிர்பார்த்தது ஒண்ணு, ஆனா நடந்தது'?... 'அந்த பையன் வேற லெவல் சம்பவம் பண்ணிட்டான்'... போட்டிக்கு பின்பு மனம்திறந்த தோனி!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஏப்ரல் 9 முதல் மே 2 வரை இந்தியாவில் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாகப் போட்டி பாதியிலே கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் போட்டிகள் நேற்று ஆரம்பித்தது.

Ruturaj, Bravo got us more than we expected': MS Dhoni

துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 58 பந்தில் 88 ரன் எடுத்து சென்னை அணிக்குப் பக்க பலமாக இருந்தார்.

Ruturaj, Bravo got us more than we expected': MS Dhoni

நேற்றைய ஆட்டத்தில் தோனி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். பின்னர் களமிறங்கிய மும்பை அணி, சென்னையின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து.

ஏற்கனவே டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையிடம் தோல்வியுற்ற நிலையில், தற்போது சென்னை அதற்கு பழி தீர்த்துள்ளது. இதன்மூலம் 12 புள்ளிகள் பெற்று சி.எஸ்.கே. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இதற்கிடையே போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் தோனி, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோரை மனதார பாராட்டினார்.

Ruturaj, Bravo got us more than we expected': MS Dhoni

இதுகுறித்து பேசிய தோனி, ''30 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியபோது 140 ரன்கள் தான் வரும் என நினைத்தோம். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரன்களையே ஸ்கோர் செய்தோம். ருதுராஜ் கெய்க்வாட்டும், பிராவோவும் நான் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரின் பங்களிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்'' என தோனி தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 24-ந் தேதி சார்ஜாவில் எதிர்கொள்கிறது.

மற்ற செய்திகள்