"என்ன பாஸ், சும்மா லட்டு மாதிரி வந்த 'சான்ஸ' இப்படி மிஸ் பண்ணிட்டீங்க.." விரக்தியில் நடந்து கொண்ட 'ரசல்'?.. குழம்பிப் போன KKR 'ரசிகர்கள்'!!.. 'வைரல்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, இந்த சீசனில் இதுவரை தாங்கள் ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
முன்னதாக நடைபெற்ற 13 ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த முறை நிச்சயம் வென்று காட்டுவோம் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது. அதற்கு சான்றாக, இந்தாண்டு ஐபிஎல் தொடரும் அருமையாக அந்த அணிக்கு ஆரம்பித்துள்ளது.
தங்களது மூன்றாவது லீக் போட்டியில், இன்று கொல்கத்தா அணியைச் சந்தித்த பெங்களூர் அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், அதிரடி வீரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர், மிகவும் அதிரடியாக ஆடினார். இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என பறக்க விட, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. இதனிடையே, இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரசல் (Andre Russell), 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, 38 ரன்களை அள்ளிக் கொடுத்தார். இதில், கடைசி ஓவரை ரசல் வீசிய போது, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை டிவில்லியர்ஸ் (Devilliers) எதிர்கொண்டார். அப்போது, டிவில்லியர்ஸ் அடித்த பந்து, நேராக ரசல் கைக்கு வந்த நிலையில், மறுமுனையில் நின்ற பேட்ஸ்மேன் ஜேமிசன் கிரீஸிற்கு வெளியே ஓடி வந்தார்.
— Aditya Das (@lodulalit001) April 18, 2021
இதனால், ஜேமிசனை ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும், ரசல் அதனை செய்யாமல், ஏதோ ஒரு விரக்தியில் கையில் பந்தை வைத்து அவுட் செய்யக் கூட முயற்சிக்காமல் நடந்து சென்றார். இன்னும் ஒரு பந்தே மீதமிருந்த நிலையில், அந்த விக்கெட் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பதால் அப்படி செய்தாரா என்றும் சிலர் கருதி வருகின்றனர்.
19.5 : Russell could've run out Jamieson and even if he had missed the stumps, AB wouldn't have taken that one overthrow run. Only good for KKR had he taken that single and gotten off strike.
That's what lack of sleep did to Russell's brain.
— Akshay (@Kohlify) April 18, 2021
Ohhh... #Russell must be upset thtz why he ignored tht run-out ...
Russell : 12 balls 38 runs only #ABdeVilliers things ✌️@RCBTweets #WeAreChallengers
— Inspiring Muslimah (@Ayesha_Speaks_) April 18, 2021
Is it time to bench Russell? No intent at all with stpping runs in field, no intnt to thrw the bowl to take possible run-out and bowling with a lazy run-up and let's keep aside his batting prformnce for last 2 season Does he thnk he's bttr for the game@KKRiders #KKR #AndreRussell
— Aniket Muppiri (@MuppiriAniket) April 18, 2021
இதனையடுத்து, ரன் அவுட் செய்யும் வாய்ப்பைத் தவற விட்ட ரசலின் வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அனைவரும் பல விதமான கருத்துக்களை ரசலின் செயல் குறித்து கூறி வருகின்றனர்.
மற்ற செய்திகள்