"'மேட்ச்' ஜெயிச்சா மட்டும் போதுமா??.. இந்த விஷயத்துல 'மும்பை' கொஞ்சம் தடுமாறுதே.." 'சீக்கிரமா சரி பண்ணிட்டு வாங்கப்பா'!.. ஏக்கத்தில் 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இறுதி ஐந்து ஓவர்களில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி, போட்டியின் விதியை மாற்றியமைத்தனர். முன்னதாக, இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் சூர்யகுமார் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சிறந்த ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள், கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அதிகம் திணறினர்.
இந்நிலையில், கொல்கத்தா அணி வீரர் ரசல் (Russell), இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, 15 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுவும், அவர் 18 ஆவது மற்றும் கடைசி ஓவரை தான் வீசினார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில், மும்பை அணிக்கு எதிராக, 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சிறப்பையும் ரசல் பெற்றார். முன்னதாக, இதே சீசனில், பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் படேல் (Harshal Patel), மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த போட்டியிலேயே ரசலும் மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
பேட்டிங்கில் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக, இதுவரை நடைபெற்ற 13 சீசன்களில் எந்தவொரு பந்து வீச்சாளரும், ஐந்து விக்கெட்டுகளை ஒரே போட்டியில் வீழ்த்தியதில்லை. ஆனால், இந்த சீசனில், மும்பை அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும், இரண்டு பேர் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, சிறப்பான பந்து வீச்சின் மூலம் தான், இந்த வெற்றி மும்பை அணிக்கு கை கூடியது.
மும்பை அணிக்கு முதல் 5 போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்பதால், அந்த அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்