பாஸ், என்னென்னமோ சொல்றாங்களே...! 'அதெல்லாம்' உண்மையா...? 'ஐயோ, நாங்க நம்ப மாட்டோம்...' - விளக்கம் அளித்த கெய்ல்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்ற ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
அதோடு நேற்று நடந்த கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணி மோதிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியுற்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை விட்டு வெளியது.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவித்திருந்தார். அதன்காரணமாக பிராவோவிற்கு பிரிவு உபச்சாரம் அளிக்கப்பட்டதோடு அவருக்கு சக வீரர்கள் பேட்டை தூக்கி பிடித்து கௌரவப்படுத்தினர்.
ஆனால், பிராவோவிற்கு நடந்தது போலவே கெயிலுக்கும் சக வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் நெட்டிசன்கள், விமர்சகர்கள் என அனைவரும் கிறிஸ் கெயிலும் இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டாரா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால், இந்த குழப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் கிறிஸ் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு தான் எங்கு ஓய்வு பெற விரும்புவதையும் தெரிவித்துள்ளார்.
அதில், 'இன்று விளையாடிய இந்த போட்டி என கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்குமே தவிர நான் எந்த வித ஓய்வையும் அறிவிக்கவில்லை.
எனக்கு ஒரு வாய்ப்பு தேவைப்படுகிறது. நான் என்னுடைய சொந்த ஊரானா ஜமைக்காவில் ஒரு கிரிக்கெட் போட்டி ஆட வேண்டும். என்னுடைய மக்கள் முன்னிலையில் நான் ஓய்வு பெறவேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்