'கைல பேட்ட மட்டும் கொடுத்தா போதும்.. சும்மா பிரிச்சு மேஞ்சுடுவாப்ல.. அடிச்சது அத்தனையும் சிக்ஸர் தான்!'.. சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மோதிக்கொண்டதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.
இதில் 4 ஒவர்களில் 26 என்கிற நிலையில் ஸ்மித்துடன் இணைந்து 9 ஓவர்களில் 121 ரன்களைச் சேர்த்த சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது.
இதில் சஞ்சு மட்டுமே 32 பந்துகளில் 1 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 74 ரன்கள் விளாச, 10 ஓவர்களில் ஸ்கோர் 119 ரன்களை எட்டியது, இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 தொடர் சிக்சர்களுடன் 30 ரன்களை கடைசி ஓவரில் விளாசினார். பின்னர் 216 ரன்களை எட்டிய ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய, சிஎஸ்கே 200 ரன்களையே எடுத்து சுருண்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ் பற்றி கூறும்போது, “நம்ப முடியாத ஒரு ஆட்டத்தை ஆடிய சஞ்சு சாம்சன் அடித்த ஒவ்வொரு ஷாட்டுமே சிக்ஸர் என்றே நான் உணர்ந்தேன்.
ஜோப்ரா ஆர்ச்சர் ஆடிய ஆட்டமும் அடித்ததும் பிரமாதம். சஞ்சுவிடம் பேட்டை கொடுத்துவிட்டால் போதும் எல்லாவற்றையும் பார்த்துப்பார். அதனால் ஸ்ட்ரைக்கை அளித்தேன். மட்டையின் நடுவில் எல்லாப் பந்தையும் வாங்கி ஆடினார் சஞ்சு. இந்த ஐபிஎல் தொடரில் பெரிய இடத்துக்கான முன்னோட்டம் இந்த இன்னிங்ஸில் அவருக்கு நிகழ்ந்ததாகக் கருதுகிறேன்.” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.
மற்ற செய்திகள்