‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன் ஜாஸ் பட்லர் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!

Also Read | “யார் சொன்னா.. இவங்களாலும் மேட்சை வின் பண்ணி கொடுக்க முடியும்”.. போட்டி முடிந்ததும் பாண்ட்யா அதிரடி பேச்சு..!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆனால் ஆரம்பமே ராஜஸ்தான் அணிக்கு சோதனையாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

RR Jos Buttler breaks down as he remembers Shane Warne

இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், விளையாடிய முதல் ஐபிஎல் சீசனிலேயே குஜராத் அணி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 45 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும், டேவிட் மில்லர் 32 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தான் வீரர்களிடம் பேட்டி காணப்பட்டது. அதில் ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து ஜாஸ் பட்லரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஷேன் வார்னே குறித்து பேசிய ஜாஸ் பட்லர் திடீரென கதறி அழுதார்.

ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வார்னே சமீபத்தில் மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன்பின் 14 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது. அதனால் இதுபோன்ற தருணங்களில் ஷேன் வார்னே இல்லையே என ஜாஸ் பட்லர் கண்கலங்கினார்.

 

Also Read | VIDEO: ‘இவரா இப்படி பண்ணது.. நம்பவே முடியலையே’.. அவுட்டான கோபத்தில் பட்லர் செஞ்ச காரியம்..!

 

CRICKET, JOS BUTTLER, SHANE WARNE, IPL FINALS, GT VS RR

மற்ற செய்திகள்