"இதுக்கு மேல தாங்க முடியாதுடா சாமி.." 'ராஜஸ்தான்' அணிக்கு காத்திருந்த வேற லெவல் 'அதிர்ச்சி'.. "ரொம்ப பெரிய 'சிக்கல்'ல மாட்டிட்டாங்களே!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடரில், இதுவரை 16 போட்டிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில், தொடர்ந்து தடுமாற்றம் காணும் ராஜஸ்தான் அணிக்கு, வேறு ஒரு சிக்கலும் புதிதாக உருவாகி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில், காயமடைந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான லியாம் லிவிங்ஸ்டனும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகினார். கடந்த ஒரு ஆண்டாக பயோ பபுலில் உள்ளதால், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக, லியாம் லிவிங்ஸ்டன் விலகியதாக தெரிவித்தார். மேலும் லிவிங்ஸ்டனின் முடிவையும், ராஜஸ்தான் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் இருந்து, மிக முக்கியமான வீரர் ஒருவர் தற்போது விலகியுள்ளது, அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு (Jofra Archer), இந்திய அணியின் தொடருக்கு முன்பாக கையில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயம், இந்திய தொடரின் போது பெரிதானதால், அவர் மீண்டும் இங்கிலாந்து கிளம்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் இருந்து வந்த நிலையில், சில போட்டிகளுக்கு பிறகு, ராஜஸ்தான் அணியுடன் அவர் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஆர்ச்சர் காயம் குறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் ஆர்ச்சர் பந்து வீசும் பயிற்சியை மேற்கொண்ட நிலையில், இன்னும் அவர் முன்னேற்றம் அடைய வேண்டுமென கூறப்படுகிறது. மேலும், அடுத்த வாரம் தனது கவுண்டி அணியான சசெக்ஸ்ஸுடன் இணைந்து, மீண்டும் அவர் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடுவார். அப்போது, அவர் வலி இல்லாமல் நல்லபடி பந்து வீசினால், 15 நாட்கள் கழித்து, அவர் கிரிக்கெட் விளையாட தயாராவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனால், அவர் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆர்ச்சர் மற்றும் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள், ராஜஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ளது, அந்த அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மிகவும் மதிப்புமிக்க வீரராக (Most Valuable Player) ஜோஃப்ரா ஆர்ச்சர் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்