ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. அவுட் ஆகாமலேயே வெளியேறிய அஸ்வின்.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட்டில் ரிட்டயர்ட் அவுட் மூலம் வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
தொட்டால் ஷாக்.. லட்சத்துல வாங்கி கோடில விற்கலாம்.. கூட்டாளிகளின் நூதன உருட்டால் அதிர்ந்துபோன நபர்..!
ஐபிஎல் தொடரில் நேற்றைய 20-வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஒருபக்கம் ஹெட்மையர் அதிரடி காட்ட, மறுபக்கம் அஸ்வின் நிதானமாக விளையாடி வந்தார். இறுதியில் கடைசி 2 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. இதில் அதிரடி காட்டினால் மட்டுமே அணியின் ஸ்கோரை உயர்த்த முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆகி வெளியேறினார். அஸ்வினின் ரன் சேர்ப்பு வேகம் குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு அனுப்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்தது.
ஐபிஎல் வரலாற்றில் ‘ரிட்டயர்ட் அவுட்’ முறையில் ஒரு வீரர் ஆட்டமிழப்பது இதுதான் முதல்முறை. போட்டி நடந்து கொண்டிருக்கும்போது பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அடுத்த பேட்ஸ்மேனை உள்ளே இறக்க விரும்பினாலோ, இதுபோல் ரிட்டயர்டு அவுட் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இதுபோன்ற ரிட்டயர்ட் அவுட்கள் இதுவரை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதில்லை.
இந்த நிலையில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்தது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே லக்னோ அணி எடுத்தது. அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
மற்ற செய்திகள்