“நான் சிங்கிள் அடிக்கவான்னு கேட்டேன், ஆனா..!” சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் வார்னர் சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

“நான் சிங்கிள் அடிக்கவான்னு கேட்டேன், ஆனா..!” சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் வார்னர் சொன்ன வார்த்தை..!

Also Read | ‘என்ன இப்படியெல்லாம் அடிக்குறாரு’.. ஒரே ஷாட்டில் SRH-ஐ மிரள வைத்த டேவிட் வார்னர்..!

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 92* ரன்களும், ரோவ்மேன் பவல் 67* ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனை அடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஆனால் அடுத்தடுத்து வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே ஹைதரபாத் அணி எடுத்தது. அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் டேவிட் வார்னர் செய்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதில், 19-வது ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டேவிட் வார்னர் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20-வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவல் எதிர்கொண்டார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரோவ்மேன் பவல் சிங்கிள் அடித்து வார்னருக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். அதனால் 20-வது ஓவரில் 19 ரன்கள் வந்தது. ஆனால் வார்னரின் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. இதனால் ரசிகர்கள் ரோவ்மேன் பவல் மீது கோபமாக இருந்தனர்

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் இதுகுறித்து பேசிய ரோவ்மேன் பவல், ‘19-வது ஓவர் முடிவில் நான் வார்னரிடம், முதல் பந்தில் நான் சிங்கிள்ஸ் எடுத்து விடுகிறேன், நீங்கள் சதம் அடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு வார்னர், அப்படி எல்லாம் கிரிக்கெட் ஆட கூடாது. நீ எப்போதும் போல் பெரிய ஷாட் ஆடி ரன்களை விளாசு என்றார்’ என கூறினார். ரோவ்மேன் பவல் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் வார்னர் ஓடிச் சென்று அவரை உற்சாகப்படுத்தினார். சதம் முக்கியமில்லை, அணியின் ஸ்கோர் தான் முக்கியம் என்று வார்னர் எடுத்த முடிவு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CRICKET, ROVMAN POWELL, DAVID WARNER, SRH VS DC, IPL 2022, டேவிட் வார்னர், ரோவ்மேன் பவல்

மற்ற செய்திகள்