"என்னா மனுஷன்யா".. பவுண்டரி லைன் அருகே நின்ன குழந்தை.. ரன் போனாலும் பரவாயில்லன்னு பிரபல வீரர் செஞ்ச விஷயம்!!.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, தற்போது டி 20 தொடரில் ஆடி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | திருப்பதி கோவிலில்.. 18 கோடி ரூபாய்க்கு 10 பேருந்துகள் காணிக்கை.. "எல்லாம் இதுக்காகத் தானா?"
முன்னதாக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி இருந்தது. இதன் பின்னர் நடந்த ஒரு நாள் தொடர் சமன் ஆனது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள், டி 20 தொடரில் ஆடி வருகிறது.
இதுவரை நடந்துள்ள இரண்டு போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அதிலும், இரண்டாவது டி 20 போட்டியில் பல வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வீரர் சார்லஸ் 46 பந்துகளில் (10 ஃபோர்கள், 11 சிக்ஸர்கள்) 118 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது.
Images are subject to © copyright to their respective owners.
தொடக்க வீரர்களான டி காக் 100 ரன்களும் (44 பந்துகளில் 9 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள்), ஹென்ரிக்ஸ் 68 ரன்களும் (28 பந்துகளில் 11 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள்) எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி வரலாறு படைத்திருந்தது. இப்படி ஒரு போட்டி முடிந்த பின்னர், தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் மூன்றாவது டி 20 போட்டியும் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இரண்டாவது டி 20 போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
தென் ஆப்பிரிக்க அணி இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த போது பந்து ஒன்று பவுண்டரியை நோக்கி வேகமாக சென்றது. இதை தடுப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் போவல் வேகமாக பந்தின் பின்னர் செல்ல, பவுண்டரி லைன் அருகே தடுக்கும் வாய்ப்பும் உருவானது. ஆனால், லைனுக்கு வெளியே 2 குழந்தைகள் இருந்த சமயத்தில் பந்தை தடுத்ததால் அவர்கள் மீது மோத நேரும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
இதனால், பந்தை தடுக்காமல் சற்று குழந்தைகளிடம் இருந்து விலகி போய் ரோவ்மன் விழ, அங்கே இருந்த பலகை மீது மோதவும் நேரிட்டது. ஆனாலும், பெரிய அளவில் காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் தெரிகிறது. குழந்தைகள் மீது மோத கூடாது என முடிவு செய்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் செய்த இந்த செயல் தற்போது அதிக பாராட்டுக்களையும் அவருக்கு பெற்றுக் கொடுத்து வருகிறது.
Rovman Powell, giving chase at full speed, has done extremely well not to completely wipe out these two kids 😳#SAvWI pic.twitter.com/fNRVqkwg7n
— Daniel (@DanSenior97) March 26, 2023
Also Read | மெர்சிடிஸ் வாங்க பிளான் போட்ட குத்துச் சண்டை வீராங்கனை.. மஹிந்திரா நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!!
மற்ற செய்திகள்