“கோலி இல்லாமலயே ரோகித் இதை பண்ணியிருக்காரு”.. சர்ச்சையை கிளப்பிய கங்குலியின் ‘லேட்டஸ்ட்’ பேச்சு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“கோலி இல்லாமலயே ரோகித் இதை பண்ணியிருக்காரு”.. சர்ச்சையை கிளப்பிய கங்குலியின் ‘லேட்டஸ்ட்’ பேச்சு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

Rohit win Asia Cup without Kohli, says Sourav Ganguly

சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி எதிர்கொண்டது. அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது. கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

Rohit win Asia Cup without Kohli, says Sourav Ganguly

இந்த சூழலில் திடீரென இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ திடீரென அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக மறுத்ததாக கூறப்படுகிறது. அப்படி உள்ள சூழலில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Rohit win Asia Cup without Kohli, says Sourav Ganguly

இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனித்தனி கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என்று தேர்வுக்குழு முடிவு எடுத்தது. அதனால்தான் டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக வேண்டாம் என்று வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதை கேட்காததால், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என அவர் கூறினார்.

Rohit win Asia Cup without Kohli, says Sourav Ganguly

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அதில், ‘ரோகித் சர்மா மீது முழு நம்பிக்கை இருந்ததால்தான் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இது சாதாரண விஷயம் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆசியா கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்தினார். அந்த தொடரில் விராட் கோலி இல்லாமலே கோப்பையை வென்று கொடுத்தார். என சவுரவ் கங்குலி கூறினார். விராட் கோலி இல்லாமலும் விளையாட முடியும் என சவுரவ் கங்குலி மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்