மான்கட் அவுட்டான இலங்கை கேப்டன்?.. பெரிய மனசோட ரோஹித் செஞ்ச விஷயம்.. மனுஷன் வேற ரகம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது.
Also Read | "அதிர்ஷ்ட தேவதை தாறுமாறா கண் தொறந்துருக்கு போல".. 2 மாசத்துல 16 கோடி.. தலைகீழான பெண்ணின் வாழ்க்கை!!
3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் சூர்யகுமாரின் அதிரடி சதத்துடன் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடரும் ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்ததால், சிறப்பான ஸ்கோரை எட்டவும் வழி செய்திருந்தது. அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 87 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து பட்டையைக் கிளப்பி இருந்தார். இதன் காரணமாக, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 373 ரன்கள் எடுத்திருந்தது.
சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் கேப்டன் தஷுன் ஷனாகா 108 ரன்களும், நிசாங்கா 72 ரன்களும் எடுத்திருந்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், இலங்கை கேப்டன் ஷனாகாவிற்காக ரோஹித் எடுத்த முடிவு ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஷனாகா 98 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த போது நான் ஸ்ட்ரைக்கரில் நின்ற அவர், இந்திய பந்து வீச்சாளர் ஷமி மூலம் மான்கட் முறையில் அவுட் செய்யப்பட்டிருந்தார். இது மூன்றாம் நடுவருக்கும் செல்ல, அந்த சமயத்தில் ஷமியிடம் பேசிய ரோஹித் அவுட் அப்பீலையும் பின் வாங்கினார். இதன் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதமடித்து மாற்றி இருந்தார் ஷனாகா.
இதுகுறித்து போட்டிக்கு பின்னர் பேசிய ரோஹித், 98 ரன்களில் அற்புதமாக ஷனாகா ஆடிக் கொண்டிருந்ததால் அவரை அப்படி மான்கட் முறையில் அவுட் செய்ய விருப்பப்படவில்லை என்றும் அவுட் அப்பீலை மறுத்ததற்கான காரணத்தை விளக்கி இருந்தார். ரோஹித் செய்த இந்த விஷயம், தற்போது பலரிடம் இருந்தும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read | பொங்கல் ரிலீஸ் .. தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர் பலி!... கொண்டாட்டத்திற்கு நடுவே நேர்ந்த சோகம்!!..
மற்ற செய்திகள்