Valimai BNS

"உங்க 'Wife' இப்டி போட்டு குடுத்துட்டாங்களே கேப்டன் .." ரித்திகா போட்ட கமெண்ட்.. "நம்ம ரோஹித் செமயா மாட்டிக்கிட்டாரு"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டையும் இந்திய அணி இழந்திருந்தது. பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில், அனைத்து போட்டிகளிலும் வென்று பல சாதனைகளை படைத்திருந்தது.

"உங்க 'Wife' இப்டி போட்டு குடுத்துட்டாங்களே கேப்டன் .." ரித்திகா போட்ட கமெண்ட்.. "நம்ம ரோஹித் செமயா மாட்டிக்கிட்டாரு"

அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக 3 டி 20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி மோதவுள்ளது. டி 20 தொடரின் முதல் போட்டி, இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க தொடரில், காயம் காரணமாக இடம்பெறாமல் போன ரோஹித் ஷர்மா, அதிலிருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்தார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா

அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் புதிய கேப்டனாகவும் ரோஹித் ஷர்மா களம் கண்டார். ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் என இரு தொடர்களிலும், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி, பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மா, சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது ஃபீல்டிங் தேர்வு, பவுலிங் ரொட்டேஷன் என அனைத்திலும் தேர்ந்த தலைமையாளாராக ரோஹித் ஷர்மா திகழ்ந்து வருகிறார்.

டி 20 உலக கோப்பை

இந்தாண்டு நடைபெறவிருக்கும் டி 20 உலக கோப்பையையும், வெல்வதற்கு தகுதியான கேப்டன் ரோஹித் ஷர்மா என்றும் பலர் பாராட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை தொடருக்கு தயாராவதற்கான பயிற்சியில் ஈடுபடும் சில புகைப்படங்களை ரோஹித் ஷர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 'Next Up, Sri Lanka’ என்ற கேப்ஷனையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

போட்டுக் கொடுத்த மனைவி

இந்நிலையில், இந்த பதிவில் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே போட்ட கமெண்ட், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது. 'ஆமாம், ஆமாம். அது எல்லாம் சிறப்பான விஷயம் தான். ஆனால், நீங்கள் எனக்கு திருப்பி அழைப்பீர்களா?' என ரித்திகா குறிப்பிட்டுள்ளார். போட்டிக்கு தயாராகும் பரபரப்புக்கு மத்தியில், தனது மனைவிக்கு, இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா அழைக்கவில்லை என்பதை அவரது மனைவியே ரசிகர்களுக்கு போட்டுக் கொடுத்துள்ளார்.

ரித்திகாவின் கமெண்ட்டின் கீழ், ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

ROHIT SHARMA, RITIKA SAJDE, IND VS SL

மற்ற செய்திகள்