WTC Final: யாருய்யா அது ‘பைனாகுலர்’ வச்சு மேட்சை பாக்குறது..? இணையத்தில் வைரலான போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை பைனாகுலர் வைத்துப் பார்த்த இந்திய வீரரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதில் ரோஹித் ஷர்மா 34 ரன்கள் எடுத்திருந்தபோது கெயில் ஜேமிசன் வீசிய ஓவரில் டிம் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இவரைத் தொடர்ந்து நீல் வாக்னரின் ஓவரில் விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து சுப்மன் கில்லும் (28 ரன்கள்) அவுட்டாகினார். இதனை அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. அதில் கோலி 44 ரன்களும், ரஹானே 49 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 217 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தற்போது நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது ரோஹித் ஷர்மா பைனாகுலர் வைத்துப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்