வரலாறு படைக்க போகும் இந்திய அணி.. எந்த அணியும் தொடாத உயரம்.. எல்லாம் ரோஹித் கேப்டன் ஆன நேரம் போல

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

எந்தவொரு கிரிக்கெட் அணியும் தொடாத ஒரு மைல்கல்லை, இந்திய அணி ரோஹித் ஷர்மாவின் தலைமையில் தொடவுள்ளது.

வரலாறு படைக்க போகும் இந்திய அணி.. எந்த அணியும் தொடாத உயரம்.. எல்லாம் ரோஹித் கேப்டன் ஆன நேரம் போல

தளபதி கம்பீர் Vs தல தோனி.. ஐபிஎல் மெகா ஏலம்.. மல்லுக்கட்ட போகும் பெரிய தலைகள்??.. பின்னணி என்ன?

தென்னாப்பிரிக்க தொடரை முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் மோதவுள்ளது.

இந்தியாவில் வைத்து இந்த தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதலாவதாக ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி, வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

மேலும், இந்த தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வதற்கு வேண்டி, இந்தியா வந்தடைந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த தொடருக்கான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பும்ரா மற்றும் ஷமி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், அதிக இளம் வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா

rohit sharma to lead india in their 1000 th odi marks new milestone

மேலும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில், காயம் காரணமாக விலகியிருந்த ரோஹித் ஷர்மா, தற்போது அதிலிருந்து குணமடைந்து, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அது மட்டுமில்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டுக்கும் ரோஹித் ஷர்மா தான் இந்திய அணியை தலைமை தாங்கவுள்ளார்.

புதிய மைல்கல்

பிப்ரவரி 6 ஆம் தேதி, அகமதாபாத் மோதிரா மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி, மிகப் பெரிய ஒரு மைல்கல்லை எட்டவுள்ளது. இந்திய அணி களமிறங்கும் 1000 ஆவது ஒரு நாள் போட்டி என்ற பெருமை தான் அது. வேறு எந்த கிரிக்கெட் அணியும், இதுவரை 1000 ஒரு நாள் போட்டிகளை ஆடியதில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலிய அணி 958 ஒரு நாள் போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 936 போட்டிகளிலும் ஆகியுள்ளது.

rohit sharma to lead india in their 1000 th odi marks new milestone

'1000' ஒரு நாள் போட்டி போட்டிகள்

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 1974 ஆம் ஆண்டு, அஜித் வடேகர் தலைமையில், தங்களின் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. சுமார், 48 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணி 1000 ஆவது ஒரு நாள் போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை ஆடியுள்ள 999 ஒரு நாள் போட்டிகளில், 518 வெற்றிகளும், 431 தோல்விகளும் அடைந்துள்ளது.

கேப்டனாக முதல் தொடர்

அது மட்டுமில்லாமல், இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி, ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ளவுள்ளது. அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும், கோலி விலகியுள்ள நிலையில், புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். அவர் தலைமை தாங்கவுள்ள முதல் ஒரு நாள் தொடர் என்னும் நிலையில், 1000 ஆவது ஒரு நாள் போட்டி என்ற பெருமையையும் இந்திய அணி பெறவுள்ளது.

rohit sharma to lead india in their 1000 th odi marks new milestone

கேப்டனாக புதிய தொடக்கத்தை மேற்கொள்ளவுள்ள ரோஹித் ஷர்மா, அதனை வெற்றியுடன் தொடங்கி, இந்திய அணியின் ஒரு நாள் வரலாற்றில், முக்கியமானதொரு போட்டியாக மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளளது.

இந்திய அணி மைல்கல்லை எட்டிய போது, கேப்டனாக இருந்த வீரர்களின் பட்டியல்:

முதல் போட்டி : அஜித் வடேகர் (Vs இங்கிலாந்து)

100 வது போட்டி : கபில் தேவ் (Vs ஆஸ்திரேலியா)

500 வது போட்டி : சவுரவ் கங்குலி (Vs இங்கிலாந்து)

750 வது போட்டி : எம்.எஸ். தோனி (Vs இலங்கை)

900 வது போட்டி : எம்.எஸ். தோனி (Vs நியூசிலாந்து)

1000 வது போட்டி : ரோஹித் ஷர்மா (Vs வெஸ்ட் இண்டீஸ்)

5 வருசத்துக்கு ரூ.40,000 கோடியா? IPL ஒளிபரப்பு உரிமை யாருக்கு? கடும் போட்டியில் 4 முன்னணி நிறுவனங்கள்!

ROHIT SHARMA, LEAD INDIA, 1000 TH ODI MARKS, இந்திய அணி, ரோஹித் ஷர்மா, கேப்டன் ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்