'வா தல.. வா தல'.. கெயிலின் சாதனையை முறியடித்து 'புதிய சாதனை'.. 'அட்சு தூக்கிய இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி-ரோஹித் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டீம்க்காக மட்டுமல்ல, நாட்டுக்காகவும்தான் நடக்கிறேன் என்று அண்மையில் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ரோஹித்.
அதன் பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 டி20 போட்டிகள் சூடுபிடித்தன. முன்புவரை டி20 போட்டிகளில் 105 சிக்ஸர்களுடன், அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் கிறிஸ் கெயில். நியூஸிலாந்து வீரர் மார்டின் குப்தில் டி20 போட்டிகளில் 103 சிக்ஸர்கள் அடித்து இரண்டாம் இடத்திலும், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 102 சிக்ஸர்கள் அடித்து 3-ஆம் இடத்திலும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் இந்த டி20 போட்டிகளின் 2-வது தொடரில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் இந்தியா வென்றது.
இதனையடுத்து புளோரிடாவில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, 106 சிக்ஸர்களை பூர்த்தி செய்து, கிறிஸ் கெயிலின் சாதனைகளை முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே, 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் 232 சிக்ஸர்கள் அடித்து, ரோஹித், 4வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.