"எனக்கா போட பாக்குறீங்க 'End' Card'u ??..." 'மாஸ்டர்' பிளான் போட்டு தயாராகும் ரோஹித்... வெளியான தகவலால் எகிறும் 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடவுள்ளது.

"எனக்கா போட பாக்குறீங்க 'End' Card'u ??..." 'மாஸ்டர்' பிளான் போட்டு தயாராகும் ரோஹித்... வெளியான தகவலால் எகிறும் 'பரபரப்பு'!!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதில் ரோஹித் ஷர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக தான் அவர் இந்திய அணியில் தேர்வாகவில்லை என பிசிசிஐ தெரிவித்திருந்தது. 

ஆனால், பிசிசிஐ அறிவித்த மறுநாளே மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. காயம் ஏற்பட்டுள்ளதால் தான் இந்திய அணியில் ரோஹித்திற்கு இடம் கிடைக்கவில்லை என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், காயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி பயிற்சி மேற்கொள்வார் என கேள்வி எழுந்தது. 

அதன் பிறகு, ரோஹித் ஷர்மாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ க்கு அளிக்கப்பட்ட மெடிக்கல் ரிப்போர்ட்டில் அவர் இன்னும் 2,3 வாரங்களுக்கு மேல் ஓய்வு எடுக்க வேண்டும் என இருந்ததால் தான் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியானது. அப்படி பார்த்தாலும், 2,3 வாரங்களில் அவர் சரியாகி விடுவார் என்றால் டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு அவரது உடல்நிலையை எப்படி தற்போதே முடிவு செய்யலாம் என்ற பரபரப்பு உண்டானது. 

இது ரோஹித் ஷர்மாவை புறக்கணிக்க வேண்டி நடந்த செயலா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல ரோஹித் தான் அணியில் இடம்பெறாமல் போனதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடாமல் இருந்து வரும் ரோஹித் ஷர்மா, அடுத்ததாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் போட்டிகளில் மும்பை அணிக்காக களமிறங்குவார் என்ற தகவலும் பரவலாக இருந்து வருகிறது.

அப்படி ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கும் பட்சத்தில் காயத்தினால் தான் அவரை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்ற பிசிசிஐ கருத்து கடும் விமர்சனத்துக்குள் ஆகலாம். அது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியின் துணை கேப்டனாக கே எல் ராகுல் தேர்வாகியுள்ளார். இது தற்காலிகம் தானா அல்லது ரோஹித் மீண்டும் வரும் போது அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்