"என்ன ஆளாளுக்கு குத்தம் சொல்றீங்க??... மத்தவங்களுக்கு ஒரு 'நியாயம்'.. எங்களுக்கு ஒரு நியாயமா??... கடுப்பான 'ரோஹித்'... 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 1 - 1 என்ற சமநிலையில் தொடர் உள்ளது.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், அஸ்வின், ரோஹித் ஷர்மா, அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர்.
ஆனால், இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் பிட்ச் தான் என்றும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக, பிட்ச் இருந்தததால் தான் வெற்றி பெற்றனர் என்றும், இந்தியாவின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத வகையிலான கருத்துக்களை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட கிரிக்கெட் நிபுணர்கள் வரை பலர் சென்னை பிட்ச்சை குறை கூறியிருந்தனர்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலான கருத்து ஒன்றை இந்திய வீரர் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். 'எங்களின் வெற்றிக்கு காரணம் பிட்ச் மட்டும் தான் என கூறிவிட முடியாது. அப்படி பிட்ச்சை காரணம் காட்டி, எங்களின் வெற்றியை குறைத்து மதிப்பிட கூடாது. நாங்கள் வெளிநாட்டிற்கு செல்லும் போது, எதிரணியினரும் எங்களுக்கு கடினமான பிட்ச்சை தான் உருவாக்குகின்றனர். அவர்களின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தான் அவர்களின் பிட்ச் இருக்கும்.
அப்படி இருக்கும் பட்சத்தில், அதனை நாங்கள் குறை கூறாமல் தான் விளையாடுவோம். எந்தவொரு அணியினரும், அவர்கள் நாட்டிலுள்ள மைதானங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். எதிரணியினர் மட்டும் அந்த பிட்ச்சில் ஆடுவதில்லை. நாங்களும் தான் ஆடுகிறோம். அப்படி இருக்கும் போது, எண்களின் வெற்றிக்கு பிட்ச் மட்டும் தான் காரணம் என எப்படி குறை கூறலாம்?' என ரோஹித் ஷர்மா சற்று ஆவேசமாக பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்