'சீனியர் ப்ளேயர்னு கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா?'.. ரோகித் சர்மாவுக்கு பறந்த வார்னிங்!.. அந்த தவற அவர் எப்படி செய்யலாம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி வீரர் ரோகித் சர்மா பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணியை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
நியூசிலாந்துடனான போட்டிக்கு பின்னர் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. புஜாரா, ரஹானே ஆகியோர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓப்பனிங் வீரராக அசத்தும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விமர்சனங்களை சந்திக்கிறார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரு இன்னிங்ஸுகளிலும் ரோகித் சர்மா ஓரளவிற்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், அதனை அவரால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது, அடுத்து வந்த வீரர்களுக்கும் பிட்ச் குறித்த கவலையை ஏற்படுத்தியாக கிரிக்கெட் வல்லுநர்கள் குறை கூறினர்.
இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்காக ரோகித் சர்மாவுக்கு முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார் சாபா கரீம். ரோகித் சர்மா, தனக்கு பின்னர் வரும் ஓப்பனிங் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இங்கிலாந்து களம் பேட்டிங்கிற்கு சிரமாக இருக்கும். ஓப்பனிங்கிற்கு களமிறங்கினால், பொறுப்புடன் விளையாட வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே பெரிய ஸ்கோரை அடிக்க முடியும்.
இந்திய அணி வீரர்களிடம் கடந்த ஒன்றரை வருடங்களாக ரோகித் சர்மாவுக்கு தனி இடம் உள்ளது. அணிக்குள் தனித்தனியாக கேப்டன்களை தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். விராட் கோலி மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோரை பின்பற்றி வந்தனர். தற்போது ரோகித் சர்மா மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர். ரோகித் சர்மா உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன். அவர் சிறப்பாக விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்