"தோனி, கோலி கிட்ட கரெக்ட்டா இருந்த ஒரு விஷயம்.. ரோஹித் கிட்ட சுத்தமா மிஸ்ஸிங்.." புதிய கேப்டனுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு முன் இருக்கும் சவால் ஒன்றினை குறித்து, முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

"தோனி, கோலி கிட்ட கரெக்ட்டா இருந்த ஒரு விஷயம்.. ரோஹித் கிட்ட சுத்தமா மிஸ்ஸிங்.." புதிய கேப்டனுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்

2011 WC அப்பறம்.. எங்கள Use and Throw மாதிரி நடத்துனாங்க.. இந்திய கிரிக்கெட்டின் சோக கதை.. புலம்பிய ஹர்பஜன் சிங்.. பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆடவுள்ளது.

இதில், முதலாவதாக ஒரு நாள் போட்டி தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதன் முதல் போட்டி, வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வீரர்களுக்கு கொரோனா தொற்று

இதனிடையே, இந்திய அணி வீரர்கள் சிலருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட வீரர்கள் தனிமையில் இருந்து வரும் நிலையில், மாற்று வீரர்கள் சிலரையும் இந்திய அணி அறிவித்துள்ளது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர், நடைபெறவுதும் உறுதியாகியுள்ளது.

மீண்டு வந்த ரோஹித் ஷர்மா

இந்தியாவில் வைத்து இந்த தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழி நடத்தவுள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில், காயம் காரணமாக இடம்பெறாமல் போன ரோஹித் ஷர்மா, தற்போதுஅதிலிருந்து குணமடைந்து, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

rohit sharma should focus on fitness says ajit agarkar

சிறந்த கேப்டன்

குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமை தாங்கவுள்ள முதல் தொடர் இதுவாகும். ஐபிஎல் போட்டியில், வெற்றிகரமான கேப்டன் என்ற பெயருடன் வலம் வரும் ரோஹித் ஷர்மா, இந்திய அணியையும் அதே வழியில் கொண்டு செல்வார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய சவால்

இந்நிலையில், ரோஹித் ஷர்மா எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி, இந்திய அணியின்  முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார். 'வொயிட் பால் போட்டிகளில், ஒரு கேப்டன் மட்டும் செயல்படுவது, சிறந்த மற்றும் சரியான முடிவு என்றே நான் நினைக்கிறேன். தற்போது,ஒரு நாள் மற்றும் டி 20 இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மாவிற்கு, என்னுடைய பார்வையில், மிகப் பெரிய சவாலாக இருக்கப் போவது, அவருடைய பிட்னஸ் தான். உலக கோப்பை வரை அனைத்து போட்டிகளிலும், ரோஹித் ஷர்மா தவற விடாமல் களமிறங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

rohit sharma should focus on fitness says ajit agarkar

அதிக கவனம்

இதற்கு முன்பு, கேப்டனாக இருந்த கோலி மற்றும் தோனி ஆகிய இருவரின் மிகப் பெரிய பலம் என்றால், அது பிட்னஸ் தான். அவர்கள் அரிதாகவே போட்டியில் இடம் பிடிக்காமல் போயுள்ளார்கள். அணியின் கேப்டன் என்றால், தொடர்ந்து ஆடிக் கொண்டே, அணியினருடன் இருக்க வேண்டும். இதனால், இனி வரும் காலங்களில், ரோஹித் ஷர்மா தன்னுடைய பிட்னஸ்ஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என அஜித் அகர்கர் அறிவுறுத்தியுள்ளார்.

அவதிப்பட்ட ரோஹித் ஷர்மா

அஜித் அகர்கர் கூறியதை போலவே, உடற்தகுதி இல்லாத காரணத்தினால், பல தொடர்களில் இடம் கிடைக்காமல், ரோஹித் ஷர்மா அவதிப்பட்டுள்ளார். அப்படி இருக்கும் நிலையில், கேப்டனாக மாறியுள்ளதால், நிச்சயம் தனது உடற்தகுதியை சிறப்பாக கையாள வேண்டும். அப்போது தான், அவரால் ஒரு கேப்டனாக நிலைத்து நிற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்ச் எடுக்காம காமெடி செய்த 'சீனியர்' வீரர்கள்.. "எல்லாத்தையும் பண்ணிட்டு அவங்க சொன்ன காரணம் தான் அல்டிமேட்"

ROHIT SHARMA, FITNESS, AJIT AGARKAR, இந்திய அணி, கேப்டன் ரோஹித் ஷர்மா, அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் அணி

மற்ற செய்திகள்