'ரோஹித் செஞ்சதுல இது தான் தரமான 'சம்பவம்'... 'வம்படியா சீண்டிய வீரர்களுக்கு ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவை.

'ரோஹித் செஞ்சதுல இது தான் தரமான 'சம்பவம்'... 'வம்படியா சீண்டிய வீரர்களுக்கு ஹிட்மேன் கொடுத்த பதிலடி'... வைரலாகும் வீடியோ!

இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த போட்டியின் நடுவே இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்த செயல் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னதாக, இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட் ஆடிக் கொண்டிருந்த கிரீஸ் கோடை அழித்தார். ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் செய்வது போல ஷாடோ செய்து இந்த செயலில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி ஸ்மித்தின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

ஸ்மித் வேண்டுமென்று செய்யவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் உள்ளிட்ட பலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இடைவெளிக்கு மத்தியில் இவர்கள் இருவரின் கண்ணில் படும் படி, இந்திய வீரர் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்வது போன்ற பாவனையை ஸ்மித் செய்ததைப் போலவே செய்து காட்டினார். 

 

ஒரு நொடி இதனை பார்த்த ஸ்மித், மறுநொடி முகத்தை திருப்பிக் கொண்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் வார்த்தைகள் மூலம் சீண்டி வரும் நிலையில், எந்தவித வார்த்தை சீண்டலும் இல்லாமல் ரோஹித் ஷர்மா செய்த செயல் தரமான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்