"அங்க என்ன பூதமா இருக்கு??... சும்மா சும்மா இதையே சொல்லிட்டு இருக்கீங்க..." யுவராஜை சீண்டிய ரோஹித்??... பரபரப்பு 'சம்பவம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 - 1 என்ற முன்னிலையில் உள்ளது.

"அங்க என்ன பூதமா இருக்கு??... சும்மா சும்மா இதையே சொல்லிட்டு இருக்கீங்க..." யுவராஜை சீண்டிய ரோஹித்??... பரபரப்பு 'சம்பவம்'!!

2 நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் மற்றும் அஸ்வின் ஆகியோர் அருமையாக பந்து வீசினர்.  இவர்களுக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது போன்ற கருத்துக்களையும் கிரிக்கெட் நிபுணர்கள் உட்பட பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கூட தனது டீவீட்டில், இந்திய அணியின் திறமையை குறைத்து மதிப்பிடுவது போல, பிட்ச்சை குறிப்பிட்டு, அதன் மூலம் தான் இந்திய அணி வெற்றி பெற்றதை போன்ற ஒரு கருத்தை கூறியிருந்தார். யுவராஜ் சிங் உட்பட பிட்ச்சை பலர் குறை கூறிய நிலையில், அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலான கருத்து ஒன்றை ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

'இந்திய அணியின் வெற்றிக்கு பிட்ச் தான் காரணம் என கூறிவிட முடியாது. அதில் உண்மை இல்லை. பந்து ஸ்விங் ஆகி அதிகம் பேர் அவுட் ஆகவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள், நேராக வந்த பந்தை எதிர்கொண்டு தான் ஆட்டமிழந்தார்கள். ஒரு பேட்டிங் யூனிட்டாக இந்திய அணியும் சொதப்பியிருந்தது. அதனால் தான் நாங்களும் அவுட் ஆனோம்.

பிட்ச் மீது எந்த தவறுமில்லை. மற்றபடி, அங்கு எதுவும் பூதமும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த பிட்ச், பேட்டிங் செய்வதற்கு உகந்ததாகவே இருந்தது. நாங்களும் இங்கு தான் ரன்கள் ஸ்கோர் செய்தோம். அதிக கவனத்துடன் பேட்டிங் செய்தால், நிச்சயம் இந்த பிட்ச்சில் ரன்களை குவிக்க முடியும்' என நெற்றியடி பதில் ஒன்றை, பிட்ச் மீது குறை கூறியவர்களுக்கு எதிராக கூறியுள்ளார்.

ஏற்கனவே, யுவராஜ் சிங் ட்வீட் அதிகம் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தற்போது பிட்ச் மீது தவறில்லை என்பது போன்ற ரோஹித் ஷர்மாவின் பதிலடி கருத்தும் அதிக பரபரப்பை மீண்டும் கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்