'அவர' விளையாட விடாம 'ஒதுக்கி' வச்சது எவ்ளோ பெரிய 'தப்பு'ன்னு நிரூபிச்சி காட்டிட்டாரு...! 'அவரு' ப்ளேயிங் லெவன்ல எப்போவும் இருக்கணும்...! - பாராட்டி தள்ளிய ரோகித் ஷர்மா...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை ஏன் களத்தில் இறக்காமல் விட்டோம் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு நேற்றைய தொடரில் கலக்கியுள்ளார் என இந்திய வீரரை மனம் திறந்து ரோஹித் ஷர்மா பாராட்டியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மோசமாக விளையாடி வருவதாக பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய ஆட்டத்தின் காரணமாக பல பேச்சுக்களை இந்திய அணி பெற்றது.
இந்நிலையில், நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. அதோடு, நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர் அஸ்வினின் விக்கெட் இந்திய அணி ஜெயிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இதுகுறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா கூறும் போது, ' அஸ்வின் கடந்த சில போட்டிகளில் தன்னை ஒதுக்கி வைத்தது தப்பு என்பதை இன்றைய ஆட்டத்தில் நிரூபித்துள்ளார்.
அஸ்வின் பந்து வீசிய 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு மேலும் வலுவை சேர்த்தது. அதில் 12 டாட் பந்துகள் ஏறக்குறைய 2 ஓவர் மெய்டன்.
இதற்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வின் இருந்தாலும் அவர் களத்தில் இறக்கப்படவில்லை. அதோடு டி20 உலகக் கோப்பை ஆட்டத்திலும் பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான அஸ்வினைக் களமிறக்கவில்லை என்பது இப்போது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அணிக்குள் வந்து தன்னை நிரூபித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அஸ்வினின் பந்துவீச்சு தரம் என்ன என்பதை அனைவரும் பார்த்தனர்.
அஸ்வின் நீண்ட இடைவெளிக்கு பின் உலகக்கோப்பை போட்டியில் களமிறக்கப்பட்டிருப்பது அவருக்கு சவாலாக இருக்கும் என தெரியும். ஆனால், அஸ்வின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அஸ்வின் விளையாடி வருவதால், அவரின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது.
அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர் ப்ளேயிங் லெவனில் எப்போதும் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் அஸ்வின் விக்கெட் எடுத்து கொடுப்பார். அதற்கான தகுதி அஸ்வினிடம் உள்ளது. நேற்றைய போட்டி மட்டுமல்லாது இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசுவார் என நம்புகிறேன்' என ரோஹித் சர்மா தெரிவித்தார்.
மற்ற செய்திகள்