மறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்?... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னணி வீரரும், அணியின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்?... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்!

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற ரீதியில் கைப்பற்றியது. இதனால் அடுத்து வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தினை பார்க்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் காயமடைந்த ரோஹித் சர்மா அடுத்துவரும்  ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், '' இந்த சுற்றுப்பயணத்தில் இனி அவர் இல்லை. அவரது காயத்தின் தன்மை குறித்து பிசியோதெரபிஸ்ட் பரிசோதித்து வருகிறார். காயத்தின் தன்மை குறித்து இனிதான் தெரிய வரும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் தற்போது ரோஹித் சர்மாவும் காயமடைந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவில் ரோஹித் சர்மாவின் காயம் குறித்து பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.