‘திடீர்ன்னு இவருக்கு இப்டி ஆய்டுச்சே..!’- தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா..!



முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேகொள்ள உள்ளது. இதற்கான அணி வீரர்களின் பட்டியலில் நேற்று திடீரென ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

‘திடீர்ன்னு இவருக்கு இப்டி ஆய்டுச்சே..!’- தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா..!



ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 ஃபார்மெட்டுகளில் கேப்டன் ஆக நியமிகப்பட்டுள்ள ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பொறுப்பில் தொடர உள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் தென் ஆப்பிரிக்காவில் அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் துணை கேப்டன் ரோகித் சர்மா.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஆக களம் இறக்கப்பட இருந்த ரோகித் சர்மா அணிப் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடருக்காக மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயம் சற்று கடுமையானதாக இருப்பதால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தே விலகும் சூழலில் ரோகித்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலுமே ரோகித் பங்கேற்கப்போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோகித் சர்மாவுக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.

பிரியங்க் பஞ்சல் குஜராத்தைச் சேர்ந்தவர். ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் ஆக இந்திய A அணியில் கேப்டன் ஆக விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவுக்கு கைகளில் ஏற்பட்ட காயத்தினால் அவர் இடத்தில் பிரியங்க் விளையாட உள்ளார். சமீபத்தில் இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 96 ரன்களை எடுத்த பிரியங்க் நேற்று இரவு திடீரென இந்திய அணியில் இணைய மும்பை அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வைக்க முக்கியக் காரணிகளுள் ஒன்றாக இருந்தவர் பிரியங்க். 100 எஃப்சி போட்டிகளில் 7011 ரன்கள் விளாசியுள்ளார் பிரியங்க். இதில் 24 சதங்கள் மற்றும் 25 அரை சதங்கள் உள்ளன. அதிகபட்ச ஸ்கோர் ஆக 314 ரன்கள் அடித்துள்ளார்.

காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்காவிலேயே அடுத்து நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை.

CRICKET, ROHIT SHARMA, SOUTHAFRIA TOURNAMENT, TEST VICE-CAPTAIN, ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்கா தொடர்

மற்ற செய்திகள்