இந்திய ODI அணிக்கு ‘புதிய’ கேப்டன் நியமனம்.. இதை யாருமே எதிர்பார்க்கலயே.. திடீர் ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வாரியம் கேப்டன்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி (Virat Kohli) விளக்குவதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி விலகியுள்ளார். அதனால் ஒருநாள் போட்டிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று (08.12.2021) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 26-ஆம் தேதி இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை கவனிக்க உள்ளார். அதனால் இனி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்