"MI லெஜெண்ட்".. ஓய்வை அறிவித்த பொல்லார்டு.. ரோஹித் ஷர்மாவின் உருக்கமான போஸ்ட்.. கண்கலங்கிய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

"MI லெஜெண்ட்".. ஓய்வை அறிவித்த பொல்லார்டு.. ரோஹித் ஷர்மாவின் உருக்கமான போஸ்ட்.. கண்கலங்கிய ரசிகர்கள்..!

Also Read | சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு.. மண்டல, மகர பூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த பொல்லார்ட், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட ஆரம்பித்ததன் மூலம் கிரிக்கெட் உலகில் அதிக கவனம் ஈர்த்திருந்தார்.

Rohit Sharma pays tribute to Kieron Pollard after His IPL retirement

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கால் பதித்த பொல்லார்ட், 13 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி உள்ளார். வேறு எந்த அணியிலும் ஆடாமல் இருந்த பொல்லார்ட், மும்பை அணிக்காக எக்கச்சக்க போட்டிகளில் அதிரடியாக ஆடி பல போட்டிகளில் தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார். ஐந்து முறை மும்பை அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற பொல்லார்டும் ஒரு முக்கிய காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

கடந்த சில தினங்களாக, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. அனைத்து அணியினரும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் விரைவில் வெளியிடுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற போவதாக அதிரடி வீரர் பொல்லார்ட் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Rohit Sharma pays tribute to Kieron Pollard after His IPL retirement

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொல்லார்ட், மும்பை அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அதே போல, முகேஷ் அம்பானி, நீட்டா, ஆகாஷ் அம்பானி, அணி நிர்வாகத்தினர், வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை பொல்லார்ட் தெரிவித்துள்ளார். மேலும், மும்பை அணிக்காக ஆட முடியவில்லை என்றால், அதனை எதிர்த்து ஆடும் அணியில் ஆடவும் விரும்பவில்லை என்றும் பொல்லார்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பொல்லார்ட் செயல்பட போவதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"பிக் மேன், மிகப்பெரிய தாக்கம். எப்போதும் மனதார விளையாடியவர். உண்மையான MI லெஜெண்ட்" என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், பொல்லார்டுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | திருமணத்தை மீறிய உறவு.. பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.. 4 வருஷத்துக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட கணவரின் சடலம்..!

CRICKET, ROHIT SHARMA, KIERON POLLARD, IPL RETIREMENT

மற்ற செய்திகள்