"அவருக்கு எல்லா பந்தும் அவுட் மாதிரியே தெரியும்".. ஜடேஜாவை கலாய்த்த ரோஹித் ஷர்மா 😅..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முந்தைய போட்டிகளில் DRS எடுத்ததில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

"அவருக்கு எல்லா பந்தும் அவுட் மாதிரியே தெரியும்".. ஜடேஜாவை கலாய்த்த ரோஹித் ஷர்மா 😅..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகள்களுக்காக 29 வருஷம் கழிச்சு மறுபடியும் திருமணம் செய்துகொண்ட தம்பதி.. பின்னணி என்ன?

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால் 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ரோஹித் ஷர்மா

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் DRS எடுப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது ஜடேஜா பற்றி பேசிய அவர்,"DRS எடுக்கும்போது குறிப்பாக ஜடேஜா ஒவ்வொரு பந்தையும் அவுட் என நினைப்பார். அது அவரது விளையாட்டு குறித்த ஆர்வம் மட்டுமே. அது எனக்கு புரிகிறது. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் என சொல்வேன். பந்து ஸ்டம்ப்களுக்கு அருகில் சென்றால் கூட பரவாயில்லை. ஆனால் அப்படியும் நடக்கவில்லை. சில பந்துகள் லெக் ஸ்டம்புக்கு வெளியே கூட பிட்ச் ஆகின. இதனை வரும் போட்டியில் திருத்திக்கொள்வோம் என நினைக்கிறேன். இதுபற்றி அவரிடமும் பேசினேன்" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

DRS

சூழல் காரணமாக பந்து திரும்புவதை கணக்கிட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா, டெல்லியில் நடைபெற்ற போட்டியில் எதிர்பார்த்த அளவு சூழல் இருக்கவில்லை என்றார். தொடர்ந்து அணியில் புதிதாக சேர்ந்துள்ள கேஎஸ் பரத் DRS குறித்து பரீட்சையம் பெற இன்னும் காலம் எடுக்கும் எனவும் அதற்காக அவர் பயிற்சி பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

Rohit sharma on Jadeja DRS discussion against Australia Match

Images are subject to © copyright to their respective owners.

கேஎஸ் பரத் பற்றி பேசிய ரோஹித் ஷர்மா,"DRS-ல் நமக்கு வெற்றி கிடைப்பது லாட்டரி போலத்தான். ஆனால், முந்தைய தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்வோம். பரத்திற்கு டிஆர்எஸ் புதியதாக இருக்கும். ஏனென்றால் ரஞ்சி டிராபியில் டிஆர்எஸ் இல்லை, இந்தியா ஏ அணியில் டிஆர்எஸ் இல்லை. எனவே அவருக்கு சிறிது அவகாசம் அளித்து, அது குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

Also Read | இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்.. மைதானத்தில் இருநாட்டு பிரதமர்கள்.. வைரலாகும் வீடியோ..!

CRICKET, ROHIT SHARMA, JADEJA, DRS, AUSTRALIA MATCH

மற்ற செய்திகள்