"1101 நாளா இதுக்காக தான் வெயிட்டிங்".. ஒரு நாள் போட்டியில் ரோஹித் கொடுத்த கம்பேக்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலக கோப்பைத் தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி மற்ற அணிகளுடன் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்களை ஆடி வருகிறது.

"1101 நாளா இதுக்காக தான் வெயிட்டிங்".. ஒரு நாள் போட்டியில் ரோஹித் கொடுத்த கம்பேக்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

Also Read | "ஸ்லோவா வந்து சேருறதுக்கும் ஒரு நேரம், காலம் வேணாமா?"... 27 வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்த லெட்டர்!!

சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர்களை வெற்றிகரமாக முடித்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது.

இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

Rohit Sharma ODI century after nearly 3 years creates record

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி அடி இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி உள்ள சுப்மன் கில், அதற்குள் நான்கு ஒரு நாள் சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை அடித்த அவர், ஒரு நாள் போட்டியில் பல்வேறு சாதனனைகளையும் படைத்திருந்தார்.

Rohit Sharma ODI century after nearly 3 years creates record

இந்த நிலையில், ரோஹித் ஷர்மா தற்போது அடித்துள்ள சதத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1101 நாட்கள் கழித்து ஒரு நாள் போட்டியில் தனது சதத்தை அடித்துள்ளார் ரோகித் சர்மா. மேலும் முழு நேர கேப்டன் ஆன பிறகு அவர் அடித்த முதல் ஒரு நாள் சதமாகவும் இது மாறி உள்ளது. அதே போல, சர்வதேச போட்டியில் ஏறக்குறைய 500 நாட்கள் கழித்து தனது சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma ODI century after nearly 3 years creates record

இது தவிர, ஒருநாள் போட்டியில் தன்னுடைய 30ஆவது சதத்தை அடித்துள்ள ரோஹித் சர்மா, ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் சமன் செய்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 46 சதங்களுடன் விராட் கோலி இரண்டாம் இடத்திலும், 30 சதங்களுடன் ரோஹித் ஷர்மா 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

அடுத்து வரும் தொடர்களில் இதே ஃபார்மை ரோஹித் சர்மா தொடருவார் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read | விபத்தில் கணவரை இழந்த பெண்.. 45 வயதில் மகன் முன்னிலையில் நடந்த மறுமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

CRICKET, ROHIT SHARMA, ROHIT SHARMA ODI CENTURY

மற்ற செய்திகள்