'அவரு எப்படிங்க 'இத' செய்யலாம்?.. எல்லா தப்பும் அவர் பண்ணிட்டு... எங்கள குறை சொல்வதா!?'.. கடுப்பான பிசிசிஐ!.. ரோஹித் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்குள் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்ட விஷயம் பெரிய பூதாகரமாகி உள்ளது. இதில் ரோஹித் சர்மா மீது பிசிசிஐ கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுத் தொடர் மேற்கொள்ளும் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டு உள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று எந்த அணியிலும் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.
ரோஹித் சர்மாவின் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். நேற்று முதல்தான் இந்திய அணி அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டது. இரவு நேரத்தில் ரோஹித் வலை பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டது.
அதாவது ரோஹித்திற்கு காயம் இல்லை. அவர் நன்றாகத்தான் இருக்கிறார். பாருங்கள் பயிற்சி எல்லாமும் செய்கிறார், என்பது போல வீடியோ வெளியிட்டு இருந்தனர். பிசிசிஐ மீது மறைமுகமாக குற்றச்சாட்டு வைப்பது போல இந்த வீடியோ இருந்தது. இதனால் பலரும் பிசிசிஐ தேர்வுக்குழுவை கேள்வியை எழுப்பி இருந்தனர்.
ரோஹித் சர்மா நன்றாகத்தானே இருக்கிறார். அவரை ஏன் அணியில் எடுக்காமல் போனீர்கள். அதுவும் டிசம்பர் மாதம் தொடர் நடக்க உள்ளது. இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்க்குள் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்கியது ஏன் என்று கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தனர். இதனால் பிசிசிஐ அமைப்பு டிவிட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதன் காரணமாக தற்போது ரோஹித் சர்மா மீது பிசிசிஐ அமைப்பு கோபத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். அணி தேர்வில் குழப்பம் இருந்தால் எங்களிடம் பேசவேண்டும். அவருக்கு காயம் இருப்பதாக ரிப்போர்ட் உள்ளது. அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். காயம் எதுவும் இல்லை என்றால் எங்களிடம் சொல்ல வேண்டும்.
அதைவிட்டுவிட்டு இப்படி வீடியோ வெளியிட்டால் என்ன அர்த்தம். அவர் செய்தது தவறு என்று பிசிசிஐ நினைப்பதாக கூறுகிறார்கள். இதனால் தற்போது பிசிசிஐ மீதும், கோலி மீதும் தேவை இல்லாத வதந்திகள் பரபரப்படுகிறது. ரோஹித் சர்மாவின் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் ஏன் வெளியிட்டது, உண்மையில் என்னதான் இதில் பிரச்சனை என்று கேள்வி எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்