'இவங்க நம்ம பசங்க'... 'நம்ம நாடு'... மைதானத்தை தெறிக்க விட்ட 'பாட்டிமா'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி,  உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார்.

'இவங்க நம்ம பசங்க'... 'நம்ம நாடு'... மைதானத்தை தெறிக்க விட்ட 'பாட்டிமா'... வைரலாகும் வீடியோ!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங்யை தேர்வு செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 314 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி 286 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவு செய்தது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. இருப்பினும் நேற்றைய போட்டியில் ஒரே ஒரு ரசிகை மட்டும், சமூகவலைத்தளம் மட்டுமல்லாது செய்தி ஊடகங்களிலும் ட்ரெண்டாகி விட்டார். சாருலதா என்ற 87 வயது ரசிகை, இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும், பீப்பி ஊதி வீரர்களை  உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார்.

இதனிடையே போட்டிக்கு பின்பு மூதாட்டி சாருலதாவை சந்தித்த ரோஹித் சர்மா அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். உடனே ரோஹித்தை கட்டி தழுவிய மூதாட்டி அவருக்கு ஆசையாய் முத்தங்களை வழங்கினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு ரோஹித் சர்மாவை மூதாட்டி கட்டித்தழுவி ஆசிர்வதிக்கும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

CRICKET, ICCWORLDCUP2019, ICCWORLDCUP, WORLDCUPINENGLAND, CHARULATA, ROHIT SHARMA, SUPER FAN, TEAM INDIA