Kadaisi Vivasayi Others

"ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஒரு நாள் தொடரை, இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

"ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"

இந்தியாவுல இப்படி ஒரு பவுலிங்கா..பிரசித் கிருஷ்ணாவை பாராட்டிய ஹிட்மேன் ரோஹித்..!

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 64 ரன்களும், கே எல் ராகுல் 49 ரன்களும் எடுத்திருந்தனர்.

தடுமாற்றம்

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சிறிய  இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியினரின் சாமர்த்தியமான பந்து வீச்சால், ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. இறுதியில், 46 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 193 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

ஆட்ட நாயகன் பிரஷித் கிருஷ்ணா

இதனால், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி தொடரை தங்கள் வசமாக்கியது. இந்திய அணியின் பந்து வீச்சில் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா, 9 ஓவர்களில், 3 மெய்டன் ஓவருடன் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

rohit sharma got angry on shardul thakur in 2 nd odi

கேப்டன் ரோஹித்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது ஆரம்பமே சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டு போட்டிகளிலும், இந்திய அணியின் ஃபீல்டிங் மற்றும் பவுலிங் ரொட்டேஷன் என அனைத்தையும் திறம்பட கையாண்டார் ரோஹித். அவருக்கு பக்கத் துணையாக விராட் கோலியும் பல ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

ஸ்ட்ரிக்ட் கேப்டன்

சிறந்த கேப்டனாக ஜொலிக்கும் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் சற்று ஸ்ட்ரிக்ட் ஆகவும் இருக்கிறார். நேற்றைய போட்டியில், ஃபீல்டர் ஒருவரிடம் வேகமாக போய் ஃபீல்டிங் நில் என கோபத்தில் கத்தியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகியிருந்தது.

ரோஹித் - ஷர்துல்

rohit sharma got angry on shardul thakur in 2 nd odi

இந்நிலையில், அதே போல ஒரு சம்பவம், நேற்றைய போட்டியில் மீண்டும் ஒரு முறை அரங்கேறியுள்ளது. ஒரு இடைவெளி சமயத்தில் இந்திய அணி வீரர் ஷர்துல் தாக்கூரிடம், அடுத்த ஓவரை பந்து வீச சொல்லி ரோஹித் ஷர்மா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை மறுத்த ஷர்துல், தன்னுடைய காலில் அதிகம் வேதனை இருப்பதால் பந்து வீச சிரமம் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

ரசிகர்கள் கருத்து

அப்போது, பந்து வீச மறுப்பு தெரிவித்து விட்டு நடந்து போன ஷர்துல் தாக்கூரிடம், ரோஹித் ஷர்மா ஏதோ கோபத்தில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, வேகமாக போய் பவுண்டரி லைனில் நிற்கவும் ரோஹித் ஷர்மா கோபத்தில் கூறியுள்ளார். ரோஹித் தலைமையில், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அணி வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டி, சற்று கோபத்துடன் ரோஹித் ஷர்மா நடந்து கொள்கிறார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதை செஞ்சா ஆண் குழந்தை பிறக்கும்.. மந்திரவாதி பேச்சை கேட்டு கர்ப்பிணி செய்த விபரீதம்.. மிரண்டுபோன மருத்துவர்கள்..!

ROHIT SHARMA, ANGRY, SHARDUL THAKUR, 2 ND ODI, ரோஹித், வெஸ்ட் இண்டீஸ், ஷர்துல்

மற்ற செய்திகள்