"ஐபிஎல் நேரத்துல.. அந்த ஒரே ஒரு பிளேயர்னால தூக்கமே இல்லாம தவிச்சேன்.." பழசை நினைத்து ஃபீல் பண்ணிய கம்பீர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் திட்டங்களை வகுத்து வருகிறது.
அதே போல, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளுடன் மொத்தம் 10 அணிகள், இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.
இதனால், முன்பு போல இல்லாமல், இரு குழுக்களாக ஐபிஎல் அணிகள் பிரிக்கப்பட்டு, ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
லக்னோ அணியில் கம்பீர்
இதில், லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தின் போதும், லக்னோ அணி சார்பில் கலந்து கொண்ட கம்பீர், அணி வீரர்களின் தேர்வுக்கு முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளின் கேப்டனாக கவுதம் கம்பீர் செயல்பட்டுள்ளார்.
மனம் திறந்த கம்பீர்
அவரது தலைமையில், கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றவும் செய்துள்ளது. இதனால், அவரின் அனுபவம் ஐபிஎல் போட்டிகளிலும் கைகொடுக்கும் என்பதால், லக்னோ அணியின் ஆட்டத்தைக் காண வேண்டி, ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர் ஒருவர் தனக்கு தூக்கமில்லாத பல இரவுகளை கொடுத்தது பற்றி, கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
"ஒரு கேப்டனாக எனக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்தது ரோஹித் ஷர்மா தான். கிறிஸ் கெயிலோ, ஏபி டிவில்லயர்ஸோ கிடையாது. ரோஹித் ஷர்மா மட்டும் தான். ஐபிஎல் தொடரில், ரோஹித் ஷர்மாவை போல கேப்டனாக இருந்து வெற்றி கண்ட வீரர் யாருமில்லை" என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐந்து முறை சாம்பியன்
ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணி அதிக முறை கோப்பையை கைப்பற்றிய பெருமை, மும்பையிடம் தான் உள்ளது.
கம்பீரின் தேர்வு
அதே போல, இந்த ஐந்து முறையும், ரோஹித் ஷர்மா தான் அணியை தலைமை தாங்கியிருந்தார். ஐபிஎல் போட்டிகள், பல கேப்டன்களை கண்டுள்ள நிலையில், தன்னுடைய உறக்கத்தை தொலைத்த வீரர் என ரோஹித் ஷர்மாவை கவுதம் கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்