Rohit Sharma Fan : மைதானத்தில் திடீரென அழுதுகொண்டே ஓடிவந்த ரோகித் ரசிகரால் பரபரப்பு..! ரூ 6.5 லட்சம் அபராதமா.?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் மெல்போர்ன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த அணிகளுக்கிடையேயான போட்டிதான் நடைபெற்று வருகிறது. இதில்தான் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான், இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன.
இதனிடையே இந்த லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிக்கொண்டன. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களுக்கு 186 ரன்களை ரன்களை சேர்த்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார்.
இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இறுதியில், 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது, இதனால் இந்திய அணி, ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்தை எதிர்கொள்வது தற்போது உறுதி ஆகியிருக்கிறது. இதற்கு இன்னொரு காரணம், புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட முன்னேற்றமும்தான்.
இந்த நிலையில், ரோகித் சர்மாவை சந்திப்பதற்கு அவரது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தற்காக, அந்த ரசிகருக்கு 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மைதானத்திற்கு ஓடிவந்த அந்த ரசிகர் ஒருவர், ரோகித் சர்மாவின் அருகில் வந்ததும் கண்ணீர் விட்டு அழுதேவிட்டார்.
அந்த சமயத்தில் கேப்டன், ரோகித் சர்மா, தம்மை காண ஓடிவந்த அந்த ரசிகர், ஒரு விடலை சிறுவன் என்பதால் பத்திரமாக அழைத்து செல்லுங்கள் என பாதுகாவலர்களிடம் குறிப்பிட்டார். பின்னர் மேட்சை முடித்துவிட்டு ரசிகர்களிடம் சென்ற ரோகித் சர்மா, அனைவருக்கும் ஆட்டோகிராஃபை போட்டுத்தந்தார். அந்த சிறுவனும் ஆட்டோகிராஃப்க்காகவே மைதானத்தில் ஓடிவந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு ரோகித் சர்மா ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.
மற்ற செய்திகள்