'ஏன் 'கோலி' மேல கோவப்படுறீங்க?'.. 'சூர்யகுமாருக்கு ரோஹித் என்ன செய்தார் தெரியுமா?'... இந்திய அணியில் இடம்பெறாததற்கு காரணம் 'இது' தான்!.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணியின் இளம் வீரர் சூர்ய குமார் யாதாவிற்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே பெரிய அளவில் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியில் இருக்கும் சூர்ய குமார் யாதவ் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் இவரை தேர்வு செய்யவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில் தற்போது இவர் இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.
வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் ஆட உள்ளது .
இந்த அணியில் மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இவருக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். மேலும், நேற்று முதல் நாள் கோலியை சூர்ய குமார் யாதவ் கோபமாக முறைத்து பார்த்ததும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
"சூர்ய குமார் யாதவை கோலி அணியில் எடுக்கவில்லை. அரசியல் செய்கிறார். அதனால் தான், களத்தில் கோலி சூர்ய குமார் யாதவிடம் கோபமாக செயல்படுகிறார். கோலிக்கு ஈகோ அதிகமாக இருப்பதால் இப்படி சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கிறார்" என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், "சூர்ய குமார் யாதவை கோலி மட்டுமல்ல, தோனி, ரோஹித்தும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. தோனி கேப்டனாக இருந்த போதும் சூர்ய குமார் யாதவ் கொஞ்சம் பிரபலம்தான். ஆனால், அப்போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல் ரோஹித் இந்திய அணியில் சில தொடர்களில் கேப்டனாக இருந்திருக்கிறார். நிதாஸ் கோப்பை தொடர் உள்ளிட்ட சில தொடர்களில் ரோஹித் தான் கேப்டன். அவர் நினைத்து இருந்தால் சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கி இருக்க முடியும்.
ஆனால், அவரும் கூட வாய்ப்பு வழங்கவில்லை. உலகக் கோப்பை தொடரில் விஜய் சங்கர் விலகிய போதும் சூர்யா அழைக்கப்படவில்லை. இதன் மூலம், கோலி மட்டும் சூர்ய குமார் யாதவை புறக்கணிக்கவில்லை. மொத்தமாக இவரை தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை" என்கிறார்கள்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. "சூர்ய குமார் யாதவ் சில ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நன்றாக ஆடுகிறார். மற்ற எதிலும் சரியாக ஆடுவது இல்லை. முதல் தர போட்டிகளில் முக்கியமாக சரியாக ஆடுவது இல்லை. இதனால் தான் இவரை அணியில் எடுக்கவில்லை" என்று கூறுகிறார்கள். இதில் அரசியலோ, ஈகோவோ எதுவும் இல்லை என்கிறார்கள்.
மற்ற செய்திகள்