'கோலி பாதியிலேயே இந்தியா திரும்பிடுவார்... கேப்டன் பொறுப்பு இவருக்கு தான் கொடுக்கணும்!'.. முன்னாள் வீரர் புது கணக்கு!.. இந்திய அணியில் மீண்டும் குழப்பம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மாற்றியமைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் தற்போது ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

'கோலி பாதியிலேயே இந்தியா திரும்பிடுவார்... கேப்டன் பொறுப்பு இவருக்கு தான் கொடுக்கணும்!'.. முன்னாள் வீரர் புது கணக்கு!.. இந்திய அணியில் மீண்டும் குழப்பம்!

ஆனால் டெஸ்ட் தொடரில் அஜிங்க்யா ரஹானேவே துணை கேப்டனாக நீடிக்கிறார். முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி விராட் கோலி நாடு திரும்பவுள்ள நிலையில், ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கோலிக்கு பதிலாக டெஸ்ட் தொடரில் அதிக அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.  

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் முதலில் வெளியிடப்பட்ட பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.

இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பட்டியலில் டெஸ்ட் தொடரில் ரோகித் பெயர் இடம்பெற்றுள்ளது. 

ஆனால், முன்னரே அறிவிக்கப்பட்டபடி துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவே இடம்பெற்றுள்ளார். மேலும், கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். அவ்வாறு அவர் திரும்பும் நிலையில் துணை கேப்டன் ரஹானே கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அதிக அனுபவம் வாய்ந்த இந்திய குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டன் ரோகித் சர்மா தான் விராட் இல்லாத போட்டிகளில் கேப்டன் பதவியை வகிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மேலும், விராட் கோலியின் குழந்தை பிறப்பு விடுமுறை குறித்த முடிவுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். நாம் எவ்வளவுதான் பிசியாக விளையாடினாலும் குடும்பத்தினருக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, விராட் கோலி இல்லாத இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போட்டிகளிலும் இது பாதிப்பை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். 

ரோகித் சர்மா தன்னுடைய அனுபவத்தை சிறப்பான வீரராகவும் கேப்டனாகவும் பல சமயங்களில் நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பதான், கடந்த 2008ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் புதிய வீரராக இருந்தாலும் சிறப்பாக ரோகித் செயல்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், தான் ரஹானேவிற்கு எதிரானவன் இல்லை என்றும் கூறியுள்ளார். ரோகித் சர்மா, புஜாரா போன்ற சிறப்பான வீரர்கள் அணியில் உள்ள நிலையில், கோலி இல்லாத சூழலில் 4வது இடத்தில் வைத்து தான் ரஹானேவை பார்ப்பதாகவும் இர்பான் பதான் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நம்முடைய இந்திய அணி மிகவும் சிறப்பாக உள்ளதாகவும், ஆனால் விராட் கோலி இல்லாதது ஒன்றுதான் குறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையாக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள பதான், அந்த அணியின் சிறப்பிற்கு ஸ்மித் மற்றும் வார்னர் கூடுதலாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்