‘அதிவேக சதம், தோனியின் சாதனையை முறியடிப்பு’.. ஒரே போட்டியில் மாஸ் காட்டிய ‘ஹிட்மேன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் தோனியின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.

‘அதிவேக சதம், தோனியின் சாதனையை முறியடிப்பு’.. ஒரே போட்டியில் மாஸ் காட்டிய ‘ஹிட்மேன்’!

உலகக்கோப்பை லீக் சுற்றின் 22 -வது போட்டி இன்று(16.06.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து அவுட்டானர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

இதில் ரோஹித் ஷர்மா அதிவேகமாக சதம்(14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) அடித்து அசத்தினார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்ப்பட்ட நிலையில் 140 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் மொத்தமாக 358 சிக்ஸர்கள் விளாசி தோனியின்(354) சாதனையை முறியடித்துள்ளார்.

ICCWORLDCUP2019, INDVPAK, ROHITSHARMA